முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க! அசந்துடுவீங்க
அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப்படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.
ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம். இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும். அக்காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அழகாக இளமையோடு இருப்பதற்கு காரணம், அவர்களது உடல் மற்றும் சரும பராமரிப்புக்கள் தான். அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான்.
மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முக அழகை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம் -
- பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும்.
- எலுமிச்சை சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும்.
- தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுங்கள்.
- உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீரில் தேன் கலந்து குடியுங்கள்.
- மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.
- உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள்.
- பணிபுரியும் இடம் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் சருமத்திற்கு நல்லது.
- கண்கள் அதிக வீக்கத்துடன் காலையில் இருந்தால் அதற்கும் தீர்வு உள்ளது. டீ பைகளை குளிர வைத்த பின்னர் கண் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.இது கண்களின் வீக்கத்தை குறைத்து அதன் அழுத்தத்தையும் குறைத்து விடும்.
- முகத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்து கொள்ள பன்னீரை கொஞ்சம் பஞ்சில் ஊற்றி கொண்டு முகத்தில் தடவலாம். இந்த குறிப்பு உங்களின் வறட்சியான முகத்தை ஈர்ப்பதுடன் வைத்து கொள்ள உதவும்.
- முகத்தை அழகாக்க வேண்டும் என்பதற்காக கண்ட கிரீம்களையும் முகத்தில் பயன்படுத்தாதீர்கள். இது முகத்தின் அழகை கெடுத்து கருமையை தந்து விடும். கூடுதலாக அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.