உடல் எடையை குறைக்கும் புடலங்காய் கூட்டு! சுவையாக செய்வது எப்படி?

lifestyle-health
By Nandhini Sep 02, 2021 12:48 PM GMT
Report

அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - 1 கப்

சிறிய புடலங்காய் - 4

காய்ச்சிய பால் - 1 கப்

மஞ்சள்தூள் - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

கடுகு, சீரகம் - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - சிறிதளவு

பச்சை மிளகாய் - 3

பெ.வெங்காயம் - 2

நெய் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உடல் எடையை குறைக்கும் புடலங்காய் கூட்டு! சுவையாக செய்வது எப்படி? | Lifestyle Health

செய்முறை:

  • பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நன்றாக பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • புடலங்காயை வட்ட வடிவத்தில் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாசிப் பருப்பை வேக வைக்க வேண்டும்.
  • அதனுடன் புடலங்காய், வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • புடலங்காய் நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவைத்துவிட்டு காய்ச்சிய பாலை ஊற்றி கிளற வேண்டும்.
  • பின்னர் வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டு கலவையில் கலந்து பரிமாற வேண்டும்.
  • சுவையான புடலங்காய் கூட்டு ரெடி.