தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? நீங்களே பாருங்க

lifestyle-health
By Nandhini Sep 01, 2021 12:41 PM GMT
Report

 உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது.

அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஓர் காய்கறி என்று சொல்லும் போது அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான். அத்தகைய பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், அதனை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.

பீட்ரூட் ரத்தசோகை குணமாகும் உடலின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பீட்ரூட்டில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க தேவையான இரும்புச்சத்து ஃபோலேட் வைட்டமின் போன்ற புதிய ரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறது.

தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிலருக்கு தோலில் சில இடங்களில் நிறமாற்றங்கள் ஏற்படும்.

இன்னும் சிலருக்கு தோலில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடும். பீட்ரூட் ஜூஸ் தினமும் அருந்தும் நபர்களுக்கு பிரச்சனைகள் நீங்கும்.

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? நீங்களே பாருங்க | Lifestyle Health

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் நம் உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் -

தோல்

சிலருக்கு தோலில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடும். இப்படிபட்டவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் தோல் பிரச்சனைகள் நீங்கிவிடும்.

தலைமுடி

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

கழிவுகள்

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள பல கழிவு பொருட்கள் நமது உள்ளுறுப்புகளில் சேர்ந்து கொள்கின்றன. வாரத்திற்கு ஒரு முறையாவது பீட்ரூட் ஜூஸ் குடித்தால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கும்.

புற்று நோய்க்கு

நமது உடலில் பல இடங்களில் புற்றுநோய் ஏற்படுகிறது. அதில் ஈரல் புற்று, கணைய புற்று மிகவும் ஆபத்தான புற்று நோய்களில் ஒன்று. பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு வேளையாவது குடித்து வந்தால், இவ்வகை புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

மூளைக்கு

மூளை செல்களின் வளர்ச்சி குறைவதால் ஞாபக மறதி உண்டாகிறது. பீட்ரூட்டில் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துகள் அதிகமுண்டு. எனவே பீட்ரூட் ஜூஸை தினமும் அருந்தினால் நல்லது.