நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரும் பாகற்காய் தொக்கு! சுவையாக செய்வது எப்படி?

lifestyle-health
By Nandhini Sep 01, 2021 11:57 AM GMT
Report

நீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடுமையான நோயாக இருக்கிறது. இதை வகையான நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக செயல்படுகிறது.

பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது பாகற்காய்.

தேவையான பொருட்கள் :

பாகற்காய் - அரை கிலோ

பொரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

புளி பெரிய - எலுமிச்சை அளவு

வெல்லம் - 50 கிராம்

அரிசி - 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

கசகசா - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க :

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - அரை சிட்டிகை

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

  • அரிசி, கசகசா மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் சற்று வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, அதை மிக்ஸியில் நன்கு அரைத்தெடுக்க வேண்டும்.
  • பிறகு, புளியை கரைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அது சூடேறியதும், கடுகு போட வேண்டும்.
  • கடுகு பொரிந்ததும், அதில் உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பிறகு, பாகற்காயை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
  • பாகற்காய் எண்ணெயில் நன்கு வதங்கியதும், அதில் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பாகற்காய், வெங்காயம் தக்காளி எல்லாமும் சேர்ந்து நன்றாக குழைந்து வந்ததும், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்ற வேண்டும். காய் நன்றாக வெந்து வரும்போது, வெல்லத்தை பொடி செய்து சேர்க்க வேண்டும்.
  • அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்து வரும்போது, அரைத்து வைத்திருப்பதை சேர்க்க வேண்டும். சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கலந்து விட வேண்டும்.
  • தொக்கு திரண்டு, வேண்டிய பதத்திற்கு வரும்போது அடுப்பை அணைக்க வேண்டும்.
  • சுவையான பாகற்காய் தொக்கு ரெடி.

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரும் பாகற்காய் தொக்கு! சுவையாக செய்வது எப்படி? | Lifestyle Health