அடேங்கப்பா.. இந்த சூரணத்தில் இவ்வளவு நன்மை இருக்கா? நீங்களே தெரிஞ்சுக்கோங்க...
பொதுவாக திரிபலா சூரணத்தில் சேர்க்கப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றையும் தனித்தனியாக சாப்பிட்டாலே அவை மிகுந்த பலனை அளிக்கக்கூடியவை.
இருந்தாலும் இந்த மூன்று மருத்துவ குணங்கள் அடங்கிய கூறுகளை ஒன்றாக சேர்க்கும் போது, இன்னும் பல அதியசயதக்க நன்மைகளை மனித உடலில் ஏற்படுத்துவதாக நம் முன்னோர்கள் கண்டறிந்தனர்.அதுவே திரிபலா சூரணம் எனப்படுகிறது.
நமது அன்றாட வாழ்வியல் முறையில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் ஒரு அங்கமாகி விட்டது மறுக்க முடியாத உண்மை. ஜன்க் உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல், பசியின்மை, அசிடிட்டி , அடிவயிறு வலி போன்ற பிரச்சனைகள் உண்டாவது வாடிக்கையாகி விட்டது.
இத்தகைய கோளாறுகள், ஹைபர் டென்ஷன், சரும பாதிப்புகள் , பார்வை குறைபாடு, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு போன்ற பாதிப்புகளை உடலில் உண்டாக்குகிறது. இந்நிலையில் வழக்கமான அண்டி பயோடிக் மாத்திரைகள் திரிபலாவின் நன்மைகளைப் போல் சிறந்த நன்மைகளை வழங்குவதில்லை.
செரிமான பிரச்சனைக்கு
குடலியக்கம் சார்ந்த குறைபாடுகளை சீரமைத்து செரிமானத்தை அதிகரிக்கும். தினமும் திரிபலா சூரணம், உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை எளிதில் எதிர்கொள்ள முடியும்.
கண் ஆரோக்கியத்திற்கு
வறண்ட மற்றும் எரிச்சலூட்டப்பட்ட கண்கள், அதிகப்படியான கண்ணீர் சுரப்பு, ஒளி அல்லது கண்ணை கூசும் உணர்திறன் போன்ற “கணினி பார்வை நோய்க்குறி” அறிகுறிகளைக் குறைக்க திரிபால கண் சொட்டுகள் உதவி செய்யும்.
உடல் எடையைக் குறைக்க
திரிபாலாவில் உள்ள ஆக்ஸிஜனேற்ற கூறுகள் மற்றும் ஹைட்ராக்சில் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு பண்புகள் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்க
உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க நாம் அன்றாடம் திரிபலா சூரணம் எடுத்து கொண்டால், அதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
ஆரோக்கியமாக வாழ நோய் எதிர்ப்புச் சக்தி மிக முக்கியம். திரிபலா சூரணம் நாம் எடுத்துக் கொண்டால், திரிபலா சூரணத்தில் உள்ள விட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும்.
நீரழிவு நோயின் தாக்கத்தை குறைக்க
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் மூன்று கிராம் அளவு திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயின் உச்சபட்ச நிலையான “ஹைப்பர்கிளைசீமியா” எனப்படும் அதீத சர்க்கரை நிலை விரைவில் குணமாகும்.
மன அழுத்தத்தை குறைக்க
மன அழுத்தம் மற்றும் கவலை தொடர்பான கோளாறுகளுக்கு திரிபலா சூரணம் குடித்து வரலாம். திரிபலா சூரணம் குடித்து வந்தால், மன அழுத்த அளவைக் குறைக்க, தூண்டப்படும் வளர்சிதை மாற்றங்களைத் தடுக்க திரிபலா உதவி செய்யும்.