தினமும் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவுன்னு தெரியுமா?

lifestyle-health
By Nandhini Aug 24, 2021 01:01 PM GMT
Report

மென்மையான சதைப்பற்று கொண்ட அரியவகை கனி தான் ராஸ்பெர்ரி பழம். இப்பழம் பார்ப்பதற்கு மாதுளை விதைகளை ஒன்றாக அடுக்கியது போல இருக்கும். ஸ்ட்ராபெர்ரி நிறத்தை போலிருக்கும்.

மேலும் சாப்பிடத் தோன்றும் அரிய வகை கனியாகும். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடையும். இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், தோலின் வறட்சியைப் போக்கவும் பயன்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருந்து எடுக்கப்படும் நறுமண பொருட்கள் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்ற உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு. இதிலிருக்கும் விட்டமின் ஏ, சி, கே,கால்சியம்,மக்னீசியம் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும்.

தினமும் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவுன்னு தெரியுமா? | Lifestyle Health

மாரடைப்பு மற்றும் புற்றுநோய்

ஸ்ட்ராபெர்ரி பழ ஜூஸ் தினமும் சாப்பிட்டு வந்தால், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வருவதை தடுக்கும். மேலும் இது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும்.

பற்களில் ஏற்படும் கறைகள் நீங்க

ஸ்ட்ராபெர்ரி பழ ஜூஸ் தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அமிலங்கள் பற்களில் ஏற்படும் கறைகளை நீக்கி விடும்.

ஒவ்வாமையை போக்கும்

சிலருக்கு வெளியில் சாப்பிடும் போது அல்லது வெந்தயம், பூண்டு போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும்போது ஒவ்வாமை ஏற்படும். அதற்கு ஸ்ட்ராபெரி பழ ஜூஸ் தினமும் சாப்பிட்டு வந்தால், ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்கும்.

காய்ச்சல் குறைய

கடுமையாக காய்ச்சல் இருக்கும் பொழுது ஸ்ட்ராபெர்ரி பழ ஜூஸ் சாப்பிட்டால், உடலில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பத்தைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதனால் காய்ச்சல் குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும்.

கொழுப்பை கரைக்க

ஸ்ட்ராபெர்ரி பழ ஜூஸ் தினமும் சாப்பிட்டு வந்தால், இப்பழத்தில் உள்ள நார்சத்து உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

சர்க்கரை நோய்க்கு

ஸ்ட்ராபெர்ரி பழ ஜூஸ் தினமும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி தேவையில்லாமல் இருக்கும் விஷக்கிருமிகளை சுத்தப்படுத்தி வெளியேற்றிவிடும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

தலைமுடி உதிர்வுக்கு

ஸ்ட்ராபெர்ரி பழ ஜூஸ் தினமும் சாப்பிட்டு வந்தால், இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து தலைமுடி உதிர்வை தடுக்கும்.

கண்களுக்கு

ஸ்ட்ராபெர்ரி பழ ஜூஸ் தினமும் சாப்பிட்டு வந்தால், கண்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

எலும்பு வலுவாக

ஸ்ட்ராபெர்ரி பழ ஜூஸ் தினமும் சாப்பிட்டு வந்தால், எலும்பு வலுவாக இருக்க வேண்டும். ஸ்ட்ராபெர்ரி அடிக்கடி மென்று சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு ஆகியவை சரியாகும்.

ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்த

ஸ்ட்ராபெரி பழ ஜூஸ் தினமும் சாப்பிட்டு வந்தால், சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு.

பரு மற்றும் வடுக்களைத் தடுக்க

ஸ்ட்ராபெரி பழ ஜூஸ் தினமும் சாப்பிட்டு வந்தால், பருவப் பெண்களுக்கு ஏற்படும் பரு மற்றும் வடுக்களைத் தடுக்கும்.