மனிதனை வாட்டியெடுக்கும் வெரிகோஸ் வெயின் நோய் ஏற்பட காரணங்களும், குணப்படுத்த வழிமுறைகளும்

lifestyle-health
By Nandhini Aug 23, 2021 01:13 PM GMT
Report

ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தாலோ அல்லது நின்று கொண்டே இருந்தாலோ கால்களில் நரம்பு முடிச்சு விழும். இதனால் அதிகமாக வலி ஏற்படும். இதை நரம்பு முடிச்சு நோய், வெரிகோஸ் வெயின் என்றும், உடம்பில் நரம்பு சுருண்டு இருப்பதை தான் “நரம்பு சுருட்டல்” நோய் என்றும் அழைக்கிறார்கள்.

இந்த நரம்பு சுருட்டல் நோய் அதிக வலியை கொடுக்க கூடியது. நரம்பு சுருட்டல் என்ற வெரிகோஸ் வெயின் வந்துவிட்டால் பாதங்களில் வீக்கம், அரிப்பு, வலி உணர்வு அதிகமாக ஏற்படும்.

இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளப்படும் நிலை வரும்.ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இந்த நோய் தாக்குகிறது. பொதுவாக இடுப்பிற்கு கீழ் தொடையின் பின்புறமாக கீழ் நோக்கி பாதம் வரைக்கும் சிலந்தி வலை தோற்றம் போன்று காணப்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பெரிதாகவும், தடிமனுடனும், அதிக வளைவுடனும் தனித்து தென்படும்.

பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் இயல்பாக ரத்தத்தின் வேகம் குறைந்தும் மேல் நோக்கி நகர்ந்து போக முடியாத நிலையும் அங்கேயே தங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்தும். அதுமட்டும் இல்லாமல் ரத்தகுழாய்களில் உள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் தளர்ச்சி மிகுதியால் ரத்தம் பின்நோக்கி சென்று ஒரே இடத்தில் அதிலும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டு தென்படும்.

மனிதனை வாட்டியெடுக்கும் வெரிகோஸ் வெயின் நோய் ஏற்பட காரணங்களும், குணப்படுத்த வழிமுறைகளும் | Lifestyle Health

நரம்பு சுருட்டல் நோய்யை குணப்படுத்த இயற்கையாக என்ன செய்யலாம் என்று பார்ப்போம் -

எறும்பு புற்றுமண்

சுத்தமான மண், எறும்பு புற்றுமண் சிறிதளவு எடுத்து நீரில் குழைத்து நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அதிக வலி, வீக்கம் நரம்பு வலி குறைவதை உணரமுடியும்.

அத்திக்காயிலிருந்து கிடைக்கும் பால்

இதை நரம்பு முடிச்சி இருக்கும் இடங்களில் தடவி பிறகு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் நரம்பு சுருட்டல் சரியாகும்.

மூலிகை சாறு மூலம் குணப்படுத்த தேவையானவை :

ஆப்பிள் சைடர் வினிகர் – 2 ஸ்பூன்

கேரட் – அரை கப்

சோற்றுக் கற்றாழை – அரை கப்

தயாரிக்கும் முறை :

கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்து மிக்ஸியில் அரையுங்கள்

அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரைக்க வேண்டும். க்ரீம் போன்ற பதம் வரும் வரைக்கும் நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.

எப்படி உபயோகிப்பது :

இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, காலை மேலே தூக்கி ஏதாவது உயரமான பொருளின் மீது வைத்துக் கொள்ள வேண்டும்.

அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவி விடலாம். இதனை அந்த நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகிக்கலாம். நல்ல பலனைத் தரும்.