இரவு தூங்கச் செல்லும்முன் சூடான தண்ணீரில் தேனை கலந்து குடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?
நம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, பாட்டி வைத்தியம் உட்பட அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
தினமும் தேன் சாப்பிடுவதால் இனிக்கும் இயற்கையின் அற்புதம். தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய ஓர் அற்புத உணவு. தேனில் நம் உடலுக்கு தேவையான எழுபது வகையான சத்துகளும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது.
தேன் மருத்துவ குணம் நிறைந்த பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தேன் சளியை எதிர்த்துப் போராடவும், சருமத்திற்கு ஈரப்பதமூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இதற்கு காரணம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதற்காகத் தான். தேன் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
அந்த ஆரோக்கியமான உணவுப் பொருளை நீங்கள் உண்ணும் விதம் மற்றும் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து உடலுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாவிட்டால் அது உங்கள் ஒட்டுமொத்த உடலை பாதிக்கிறது.
தேன் ஒரு ஆரோக்கியமான மூலப்பொருள், இது தினமும் உட்கொண்டால் சிறந்தது. இது கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படுகிறது.
இரவு தூங்கச் செல்லும் முன் சூடான தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
இறுமல், தொண்டை எரிச்சலுக்கு
ஒரு டம்ளர் வெதுவெப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரவு குடித்து வந்தால், தொண்டை வலி, தொண்டை எரிச்சல், இறுமல் போன்றவற்றை குணமாக்கும்.
ரத்த அழுத்தம் குறைக்க
ஒரு டம்ளர் வெதுவெப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரவு குடித்து வந்தால், தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது.
நிம்மதியான தூக்கம் பெற
ஒரு டம்ளர் வெதுவெப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரவு குடித்து வந்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறச் செய்யும்.
ஆரோக்கியமான கல்லீரல்
ஒரு டம்ளர் வெதுவெப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரவு குடித்து வந்தால், தேனில் புருக்டோஸ் மற்றும் க்ளுக்கோஸ் போன்ற இரவு நேரத்தில் கல்லீரலின் செயல்பாட்டிற்குத் தேவையானவை உள்ளதால் இது ஆரோக்கியமான கல்லீரலை தருகின்றது.
உடல் பருமன் குறைக்க
ஒரு டம்ளர் வெதுவெப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரவு குடித்து வந்தால், உடல் பருமனால் அவதிப்படுபவருக்கு வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து சீராக உடல் கட்டமைப்பை தருகின்றது.