புற்றுநோய் வராமல் தடுக்கும் எள்ளு உருண்டை! சுவையாக செய்வது எப்படி?

lifestyle-health
By Nandhini Aug 19, 2021 12:07 PM GMT
Report

எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாக இருப்பதாகவும், இப்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று.

இதில், 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின், 'ஏ, பி' போன்றவை உள்ளன. இதை சரியான அளவில் எடுத்துக் கொண்டால், பலன் முழுமையாக கிடைக்கும்.

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் நன்மை கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

  • வெள்ளை எள் - 8 கப்
  • சர்க்கரை - 6 கப்
  • ஏலக்காய் - 12
  • நெய் - சிறிதளவு

செய்முறை:

  • முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்ற வேண்டும்.
  • அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுக்க வேண்டும்.
  • பின்னர் வறுத்தெடுத்த எள்ளு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்க வேண்டும்.
  • நைசாக அரைக்காமல் சிறிது மொற மொறப்பாக அரைக்க வேண்டும்.
  • இதனையடுத்து, ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு இடைவிடாது பாகு காய்ச்ச வேண்டும்.
  • பின்னர் சர்க்கரையை பாகில் வறுத்தெடுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
  • சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.
  • சுவையான எள்ளு உருண்டை ரெடி.