அடடா... இந்த பூவில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? இது தெரியாம போச்சே... நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்!

lifestyle-health
By Nandhini Aug 19, 2021 11:58 AM GMT
Report

நித்திய கல்யாணி பூக்களில் இருந்து தோல் நோய்களைக் குணப்படுத்து வதற்கான களிம்புகள் தயாரிக்கப்படுகின்றன. நித்தியகல்யாணி 1 மீட்டர் வரை செங்குத்தாக வளரக்கூடிய சிறுசெடி வகைத் தாவரமாகும். இலைகள், எதிரெதிராக, நீள்வட்ட வடிவிலோ, தலை கீழ் முட்டை வடிவத்திலோ அமைந்திருக்கம். நித்தியகல்யாணி மலர்கள், ஐந்து இதழ்களைக் கொண்டது.

இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறமானவை. நுனியில் 2, 3 கொத்துக்களாகக் காணப்படும். நித்தியகல்யாணி தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. பாழ் நிலங்கள், சாலையோரங்களில் அதிகமாகக் காணலாம். அழகுத் தாவரமாக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. பூ, வேர் ஆகியவை அதிகமாக மருத்துவத்தில் பயன்படுபவை.

காக்கைப் பூ, சுடுகாட்டுப் பூ, சுடுகாட்டு மல்லிகை, கல்லறைப் பூ ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. நித்திய கல்யாணி செடி கார்பன்-டை-ஆக்ஸைடை தன்னுள்ளே உட்கிரகித்து கொண்டு நூறு சதவீதம் ஆக்சிஜனை நமக்கு வெளியிடுகிறது.

ஆகவே இதனை தாராளமாக நாம் வீட்டில் வைத்து வளர்க்கலாம். உடல் அசதிக்கு நித்திய கல்யாணி செடியில் இருந்து தான் இன்று உயிர்கொல்லி நோயாக இருக்கும் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.\

அடடா... இந்த பூவில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? இது தெரியாம போச்சே... நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்! | Lifestyle Health

உடல் அசதிக்கு

5 நித்தியகல்யாணி பூக்களை ½ லிட்டர் நீரில் இட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி குடிக்க வேண்டும். இதைப் போல ஒரு நாளைக்கு 3 வேளைகள் 5 நாள்கள் வரை சாப்பிடலாம்.

நீரழிவு நோய்க்கு

நீரழிவு கட்டுபட நித்தியகல்யாணி வேர்த்தூள் 1 சிட்டிகை அளவு சுடுநீரில் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறைகள் ஒரு வாரம் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.

மலச்சிக்கல்

சிலருக்கு மலம் கழித்தலில் சிக்கல் இருக்கும். குறிப்பாக, ஆசன வாயில் எரிச்சலுடனோ ரத்தமோ வந்தால், இந்த நயன்தாரா கஷாயம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, சிலருக்கு ஆசனவாயைச் சுற்றி கொப்புளங்களும் உண்டாகியிருக்கும். அப்படி இருப்பவர்கள் இந்த கஷாயத்தைக் குடிக்கலாம். இதை ஆறவைத்து ஆசனவாயைக் கழுவவும் பயன்படுத்தலாம். வெளிப்புண்களையும் இது ஆற்றும்.

புண்

உடலில் உண்டாகின்ற எந்த வகையான புண்ணாக இருந்தாலும் நித்திய கல்யாணி என்னும் நயன்தாரா இலை தான் சிறந்த மருந்து. இதனுடைய இலைகளை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து புண்களின் மீது தடவி வர ஆறாத புண்களும் ஆறும்.

விஷக்கடி

தேள், பூரான், தேனி போன்ற விஷயக்கடிகள் தாக்கி விஷம் ஏறிவிட்டாலும் இந்த நித்திய கல்யாணி இலையை அரைத்து பற்று போடலாம். உள்ளுக்குள்ளும் குடிக்கலாம். மன உளைச்சல், தூக்கமின்மையைக் கூட இது சரி செய்யும்.