தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

lifestyle-health
By Nandhini Aug 17, 2021 12:39 PM GMT
Report

கோடைகாலம் வந்துவிட்டாலே வெள்ளரிக்காய் சீசன் களைகட்ட ஆரம்பித்து விடும். அதிக நீர்ச்சத்து உள்ள இந்த காயை விரும்பாதவர்கள் என்று யாரும் கிடையாது.

நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாகவும், உடல் வெப்பத்தை தணிக்க கூடியதாகவும் விளங்க கூடிய வெள்ளரிக்காய் வெயில் காலங்களில் அதிகம் காணப்படுகிறது.

இது உலகில் அதிகம் விளையும் காய்கறிகளில் நான்காம் இடத்தை வகிக்கிறது. வெள்ளரிக்காய் சத்து மிகுந்த காயாகும்.

இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.

வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சிகளை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும்.

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? | Lifestyle Health

செரிமானம்

வெள்ளரியில் வைட்டமின்கள், உணவு வகை நார்ச்சத்து, நீர் ஆகியவை நிறைந்துள்ளது. ஆகவே, செரிமானத்திற்கு உதவுகிறது. தினமும் ஒரு வெள்ளரியை சாப்பிட்டால், மலம் கழிப்பதிலுள்ள பல பிரச்னைகளை அது தீர்க்கும். மலச்சிக்கலை போக்கக்கூடிய தன்மை வெள்ளரிக்கு உண்டு..

புற்றுநோய்

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும், இரத்த அழுத்தம் சீராகும், கொலஸ்ட்ரால் குறையும். மேலும், இதில் இருக்கும் செக்ஸோலார்சிகரேசினோல், லேசிக்கிரியினோல் மற்றும் பினோரிசினோல் பெண்களுக்கு ஏற்படும் மார்பக, கருப்பை வாய் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்கும்.

உடல் எடையை குறைக்க

வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். ஆகவே இதனை சூப் அல்லது சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் சூட்டை தணிக்க

நம் உடலின் செயல்பாட்டிற்கு நீர் முக்கியமானது, வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து இருப்பதால் உடல் வறட்சியை போக்கும். மேலும் உடல் ஏற்பட்டுள்ள வெப்பத்தை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். வெள்ளரிக்காய் உடல் சூட்டை தணிக்கும்.

கண் ஆரோக்கியம்

கண்களில் வெப்பம் அதிகமானால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடும். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கும். வெள்ளரி துண்டை கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.

உடல் வறட்சியை நீக்க

தண்ணீர் குடிப்பதற்கு நேரம் கிடைக்காமல் வேலையாக இருக்கிறீர்களா? அப்படியானால் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். அதில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இது தண்ணீர் குடிக்காததை ஈடுசெய்யும்.

சிறுநீரகம் பாதுகாக்க

உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க

ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். 30 நொடிகள் வரை வைக்கவும், அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தைப் போக்கும்.

மன அழுத்தம்

மனக்கலக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய வைட்டமின்கள் பி1, பி5 மற்றும் பி7 ஆகியவை வெள்ளரியில் காணப்படுகின்றன. ஆகவே, வெள்ளரி சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.