எலும்புகளை வலுப்படுத்தும் ராகி பாதாம் மில்க் ஷேக்! சுவையாக செய்வது எப்படி?

lifestyle-health
By Nandhini Aug 17, 2021 12:23 PM GMT
Report

கேழ்வரகு சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். இது பல கிராமங்களின் பிரதான உணவும் கூட இதுதான். அதிலும் கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன.

ஆரோக்கியமான உணவு ஆகும். கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.

தேவையான பொருட்கள்

  • ராகி – 100 கிராம்
  • பாதாம் – 20
  • ஏலக்காய் தூள் – ¼ ஸ்பூன்
  • நாட்டு சர்க்கரை – 100 கிராம்
  • பால் - 2 கப்

எலும்புகளை வலுப்படுத்தும் ராகி பாதாம் மில்க் ஷேக்! சுவையாக செய்வது எப்படி? | Lifestyle Health

செய்முறை

  • முதலில் ராகி, பாதாம் இரண்டையும் முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்.
  • மறுநாள் காலையில் ஊற வைத்த ராகி, பாதாம் இரண்டையும் தண்ணீரை வடிகட்டி மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்த ராகி, பாதாமை ஒரு வடிகட்டி வைத்து வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ள வேண்டும்.
  • அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் அரைத்து வடிகட்டி வைத்துள்ள ராகி, பாதாம் பாலை சேர்க்க வேண்டும்.
  • பின்னர், பாலை சேர்த்து கை விடாமல் நன்கு கிளற வேண்டும்.
  • ராகி பால் நன்றாக வெந்து கண்ணாடி போன்று கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • ராகி பால் நன்றாக வெந்ததும் 50 கிராம் அளவிற்கு நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும்.
  • நாட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • பின்னர் அதில் 1 கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்க்க வேண்டும்.
  • பால் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அதில், ஒரு சிட்டிகை அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்துக் நன்கு கிளறி இறக்கினால் சுவையான ராகி, பாதாம் பால் ரெடி.