வெங்காயத்தாளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அட... நீங்களே பாருங்களேன்!

lifestyle-health
By Nandhini Aug 16, 2021 12:17 PM GMT
Report

வெங்காயத்தாள் அதிகமானோருக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. கிராம புறங்களில் உள்ளவர்கள் வெங்காயத்தாளினை நன்கு அருந்திருப்பார்.

வெங்காயத்தாள் என்பது வெங்காய செடியில் உள்ள இலையை தான் வெங்காய தாள் என்று அழைப்பர். வெங்காயத்தாளனது சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

வெங்காயத்தாளனது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப்படுகிறது. இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு ஆகியவற்றின் குடும்பத்தை சேர்ந்த கீரையாகும்.

வெங்காய தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது. வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன.

வெங்காயத்தாளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அட... நீங்களே பாருங்களேன்! | Lifestyle Health

வெங்காயத்தாளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -

சர்க்கரை அளவை குறைக்க

வெங்காயத்தாளில் உள்ள அமிலமானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி பெற

வெங்காய தாளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்களான ப்ளவனாய்டுகள், குவர்செடின் மற்றும் அன்டோசைனின் போன்றவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகின்றன.

புற்றுநோய்

வெங்காயத்தாளில் உள்ள பெக்ஷன் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

கண் பிரச்சனை

வெங்காயத்தாளினை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து, தீர்வையும் அளிக்கிறது.

ஆஸ்துமா நோய்

வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

இரத்த அழுத்த அளவை குறைக்க

வெங்காயத்தாள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

காச நோய்

வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும்.