உடல் எடையை குறைக்கும் பசலைக்கீரை சூப்!

health weight loss lifestyle-health
By Nandhini Aug 16, 2021 10:18 AM GMT
Report

இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. குறைந்த கலோரி பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.

பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண் டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பசலைக் கீரை - 1 கட்டு

உளுந்து (வறுத்தது) - 1 ஸ்பூன்

தக்காளி - 2

வெங்காயம் - 1

பூண்டு - 10 பல்

இஞ்சி - 1 துண்டு

கொத்தமல்லி - 1 கைப்பிடி

புதினா - 1 கைப்பிடி

மிளகு - அரை ஸ்பூன்

சீரசும் - அரை ஸ்பூன்

உப்பு, மஞ்சள், எண்ணெய் - தேவையான அளவு

உடல் எடையை குறைக்கும் பசலைக்கீரை சூப்! | Lifestyle Health

செய்முறை

  • பசலைக்கீரை, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், மஞ்சள், உளுந்து ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
  • அரைத்த கலவையை தக்காளியுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • கடைசியாக, கீரையையும் போட்டு வதக்கி, 6 டம்ளர் நீர் சேர்த்து பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவு உப்புச் சேர்த்து இறக்கி பரிமாற வேண்டும்.
  • சத்தான சுவையான பசலைக்கீரைசூப் ரெடி.