குக்கர் சாதம் நீங்கள் சாப்பிடுபவர்களா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்குத்தான்

lifestyle-health
By Nandhini Aug 13, 2021 12:29 PM GMT
Report

இன்றைய அவசர உலகில் சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு பல நவீன உபகரணங்கள் வந்து விட்டன. கூடவே, நோய்களும் அழையா விருந்தாளியாக வருகிறது. அந்த வகையில் குக்கர் சாதத்தையும் சொல்லலாம். பொதுவாக குக்கர் சாதம் சாப்பிடும்போது உடல்நல கேடுகள் அதிகமாக ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர். இதனால், காலையில் அலுவலகம் போகிற அவசரத்தில் எப்படியாவது சமையலை முடித்து விட வேண்டும் என்று பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்களில் சமைக்கின்றனர். அதே நேரத்தில் இந்த நவீன உபகரணங்கள் மூலம் செய்யப்படும் உணவுகள் நோய்களுக்கு வருவதற்கு காரணமாகி விடுகின்றன.

குக்கர் சாதம் சாப்பிடுவது சரியா? என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம் -

பொதுவாக குக்கரில் சாப்பாடு செய்வது சாதாரணமான ஒன்று தான். குக்கர் சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகமாகவே உள்ளது.

வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவீதம் மாவுச்சத்துகள் குறைந்துவிடுகின்றன.

மேலும், ரத்த சர்க்கரையின் அளவை அது உடனடியாக கூட்டாது. ஆனால் குக்கரில் சமைக்கும்போது அந்த சத்துக்கள் சாப்பாட்டில் முழுமையாக அப்படியே இருக்கும்.

குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்கப்படுவது கிடையாது. அதனால் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருக்கிறது.இதனால், திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

நார்சத்து நிறைந்த கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கின்றன.

குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்சினை அதிகம் வர வாய்ப்புகள் உள்ளன.

அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே அது மிகவும் உடலுக்கு நல்லது.

பொதுவாக வேகமாக தயாரான சாப்பாட்டை இரண்டு மடங்கு எடுத்து கொண்டால் மட்டுமே வயிறு நிரம்பும். இப்படி வயிற்றுக்குள் உணவை திணிக்க திணிக்க பிரச்சினைகளும் அதிகமாகிவிடும்.

எனவே கூடுமான வரை குக்கர் சாதம் சாப்பிடாமல் கஞ்சி வடித்த சாப்பாட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.  

குக்கர் சாதம் நீங்கள் சாப்பிடுபவர்களா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்குத்தான் | Lifestyle Health