தினமும் ஒரு கைப்பிடி ஆளி விதையை சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?

lifestyle-health
By Nandhini Aug 12, 2021 11:13 AM GMT
Report

ஆளி விதைகள் அதிக ஊட்டச்சத்துக்களை தன்னுள் அடக்கிய ஒரு அற்புதமான விதையாகும். இது பார்ப்பதற்கு கொள்ளு போன்று காணப்படும்.

இதில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஃபேட்டீ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை, மனித உடலின் சீரான இயக்கத்திற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. ஆளி விதையில் ஒமேகா 3, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

இவ்வளவு சத்துக்களை கொண்ட ஆளிவிதையை தினசரி உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம். அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். ஆளி விதையில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.

தினமும் ஒரு கைப்பிடி ஆளி விதையை சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? | Lifestyle Health

ரத்தக் குழாய்

ரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது.

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு ஆளி விதை சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது.

புற்றுநோய்

தினமும் ஒரு கைப்பிடி அளவு ஆளி விதை சாப்பிட்டு வந்தால், இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மற்றும் ஈஸ்ட்ரோஜென் பண்புகள் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை பெரிய அளவிற்கு குறைகின்றது. மேலும் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகின்றது.

உடல் எடை குறைய

தினமும் ஒரு கைப்பிடி அளவு ஆளி விதை சாப்பிட்டு வந்தால், ஆளி விதையில் இருக்கும் சத்துக்கள் உடல் பருமனை குறைத்து, உடல் எடை சீரான அளவு வர உதவுகின்றது.

நோய் எதிர்ப்புச் சக்தி

தினமும் ஒரு கைப்பிடி அளவு ஆளி விதை சாப்பிட்டு வந்தால், இதில் இருக்கும் பல வகை அமிலங்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, சோர்வடையாமல் இருக்க உதவும்.

உடல் வீக்கங்கள் குறைக்க

2 தேக்கரண்டி ஆளி விதையில் 140% சத்துக்கள் நிரம்பியுள்ளது. மேலும், இதில் ஒமேகா 3 பெருமளவு உள்ளதால் காயங்களால் ஏற்படும் வீக்கங்களை விரைவில் குணப்படுத்துகிறது. அழற்சியினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை தருகிறது.

கண்களின் வறட்சியைத் தடுக்க

ஆளி விதையை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், அது கண்களில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, கண் நோய்களுள் ஒன்றான மாகுலர் திசு சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.