மலச்சிக்கலால் அவதியா? இதோ பாட்டி வைத்தியம்
மலச்சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயற்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.
மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது?
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.
மலச்சிக்கலை போக்க வீட்டு வைத்தியத்தைப் பார்ப்போம் -
தண்ணீர்
ஒருவர் தினமும் போதுமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும். இது மிகவும் எளிமையான ஒன்று. நீரேற்றத்துடன் இருப்பது உங்கள் குடல் அசவுகரியங்களை நீக்கும். ஒரு டம்பளர் சூடு தண்ணீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் எலும்பிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலசிக்கல் பிரச்சனை தீரும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, அதனுடன் சுடுநீரை ஊற்றி, தேன் கலந்து தினமும் 3 டம்ளர் குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.
கரும்பு ஜூஸ்
கரும்பு ஜூஸில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, தேன் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கலாம். இஞ்சி கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, பின் அதை வடிகட்டி, அதில் தேன் கலந்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
வெஜிடேபிள் சூப்
வெஜிடேபிள் சூப் செய்யும் போது, அதனுடன் இஞ்சியை துருவி அதனுடன் சேர்த்து குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.
நெய்
வெது வெதுப்பான டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி நெய் கலந்து படுக்கைக்குப் போகும் முன்னர் அருந்தி தூங்கினால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
உடற்பயிற்சி
நமது உட்கார்ந்த நிலையில் வேலைகளை செய்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உடலின் இயக்கங்கள் குறைக்கப்படும். ஆகவே, நீங்கள் தொடர்ந்து ஒரு உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். அதாவது நடைபயிற்சி, ஜாகிங், ஹான்ட் பிரீ பயிற்சிகள், ஸ்குவாட்டிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் ஆகியவை மலச்சிக்கல் பிரச்சனையை எளிதில் குறைத்து விடும்.