நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தரும் முள்ளங்கி சட்னி! சுவையாக செய்வது எப்படி?

lifestyle-health
By Nandhini Aug 11, 2021 02:27 PM GMT
Report

முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. மேலும் முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிக்கின்றன.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி, கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, சட்னி செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கி விடும். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்.

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 4

தேங்காய் - கால் மூடி

கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 7

புளி - நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணெய் - 4 குழிக்கரண்டி

கடுகு - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தரும் முள்ளங்கி சட்னி! சுவையாக செய்வது எப்படி? | Lifestyle Health

செய்முறை:

  • முதலில் முள்ளங்கியை நன்றாக பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
  • பின்னர், வெங்காயத்தை நீளவாக்கி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய முள்ளங்கி போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பொன்னிறமாக வதக்கிய பிறகு வெங்காயத்தை போட்டு மேலும் வதக்கி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
  • அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகத்தையும் சேர்த்து பொரிய விட்டு, பின்னர் அதில் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
  • அதனுடன் தேங்காய் துருவல் புளி சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட வேண்டும். அனைத்தையும் ஆறிய பிறகு, மிக்சியில் போட்டு நன்கு அரைத்தெடுக்க வேண்டும்.
  • கடைசியாக எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்ட வேண்டும். சுவையான முள்ளங்கி சட்னி ரெடி.