தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவுன்னு தெரியுமா?
நமக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.
தாகத்திற்கு தண்ணீருக்கு அடுத்ததாக நம் முன்னோர்கள் மோர் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
முன்பெல்லாம் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களுக்கு காபி டீ போன்றவைகளுக்கு பதிலாக மோர் கொடுப்பது தான் வழக்கம்.
மோரில் ஏராளமான ஊட்டசத்துக்கள் இருக்கின்றது, மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.
சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் மோரைக் குடித்தால் அது உடலுக்கு பல நன்மைகளைத் தரும்.
குறிப்பாக, உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் என்பது பலரும் அறிந்த ஒன்று.
ஆனால், தினமும் மோர் குடித்து வந்தால் உங்கள் சருமம் மிக அழகாக பொலிவடையும்.
வெளியில் விற்கும் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்க்ரீம் அதிக விலையுடன் இருக்கும். இதற்கு மாறாக நீங்கள் குளிர்ச்சியுடைய பழங்கள் அதிகமாக உண்ணலாம். வீட்டிலே எளிமையான முறைப்படி மோர் தாயரித்து குடிக்கலாம்.
காரணம் உங்கள் பட்ஜெட்டை இது குறைப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. மோரை பானையில் வைத்து குடிப்பதால் இன்னும் ருசியாக இருக்கும்.
தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் -
உடல் கொழுப்பு
மோரில் இருக்கும் புரதச்சத்தானது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவி செய்யும்.
மலச்சிக்கல்
நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகமாக உண்ணாதவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உருவாகும். மோரை தினமும் குடித்து வந்தால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும்.
நீரிழப்பைத் தடுக்க
தயிரினுள் நீர, உப்பு போன்றவற்றை கலந்த மோர்க்கலவையைக் குடிப்பதனால் உடலில் நீரிழப்பு ஏற்படாது. தயிரில் சமிபாட்டிற்க்கு உதவியாக காணப்படும் புரோ பயோடிக்ஸ் (Probiotics) பாக்டீரியாக்கள் உள்ளன. (இவை உடலுக்கு நன்மை பயக்கும் பக்டீயா இனத்தைச் சோர்ந்தது). தயிரினை மோராக மாற்றமடையச் செய்யும் போதே இந்நன்மைகளை அடைய முடிகின்றன.
பெண்களுக்கு
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, ரத்தப் போக்கை சமாளிக்க ஒரு டம்ளர் மோருடன் வெந்தயம் சேர்த்து குடித்தால் போதும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் சரியாகும்.
உடல் வறட்சியை தடுக்க
உடல் வறட்சி மிகப்பெரிய பிரச்சனை. நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடல் வறட்சியால் அவஸ்தைப்படக்கூடும். இந்த உடல் வறட்சியை சரிசெய்ய சிறந்த வழி என்றால், அது மோர் குடிப்பது தான். மோரை ஒருவர் தினமும் குடித்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, உடலில் ஆற்றலும் அதிகரிக்கும்.
வயிற்றுப் போக்கை தடுக்க
வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சி பொடி அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகிவிடும்.
இரத்த அழுத்தம்
மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்