தாம்பத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்க வேண்டுமா? அப்போ... இந்த பழங்களை சாப்பிடுங்கள்... பிறகு பாருங்க நடப்பதை...
இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் தனக்கென்று ஒரு துணையை தேர்ந்தெடுத்து நம் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
அந்த இல்லற வாழ்க்கையின் மூலம் தான் தனக்கென்று ஒரு சந்ததியை உருவாக்கி கொள்ள முடியும். இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது.
இத்தனை முக்கியத்துவம் பெற்ற திருமணத்துக்குத் தயாராவதே ஒரு பெரிய வேலையாகத்தான் இருக்கும். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரின் இடையே நிகழும் ஒரு அற்புத நிகழ்வு தாம்பத்தியம்.
இந்த தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டால், திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. இதனாலேயே இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விடும் நிலைக்கு செல்கிறார்கள்.
தாம்பத்தியம் என்பது உடல் ரீதியாக சார்ந்தது மட்டும் அல்ல, இரு மனங்கள் சார்ந்தது. ஒரு சிலர் உடல் ரீதியாக உறவு கொள்வது மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மன ரீதியாக எந்த உணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பது மிகவும் தவறான ஒன்று. இது தன் துணைக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தும்.
உங்கள் தாம்பத்தியம் சிறப்பாக அமைய இந்த பழங்களை சாப்பிட்டாலே போதும்.
ஸ்டாபெர்ரி பழம்
தாம்பத்தியத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஸ்டாபெர்ரி பழத்தை நன்றாக சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் அதிகரிக்கும்.
ஐஸ் க்ரீம்
ஐஸ் க்ரீம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. தாம்பத்திய உறவை தொடங்குவதற்கு முன்பு ஐஸ்கீரிம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்துவிடும்.
திராட்சை பழம்
தாம்பத்திய உறவில் தேவையான சக்தியை கொடுப்பது திராட்சை பழம் தான். எனவே, தாம்பத்தியத்தை தொடங்குவதற்கு முன்பு திராட்சை பழம் சாப்பிட்டால் தாம்பத்திய நேரம் இன்னும் அதிகரிக்கும்.
டார்க் சாக்லேட்
தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி செய்யும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் சாக்லெட்டை சாப்பிட்டு துவங்கினால் தாம்பத்திய ஆர்வம் இன்னும் இன்னும் அதிகரிக்கும்.
வாழைப்பழம்
தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். வாழைப்பழத்தில் தாம்பத்திய ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும் ஊட்டசத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால், உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு உடலை சோர்வடையாமல் இருக்க வழிவகுத்து விடும்.