முளையிட்ட பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க....

lifestyle-health
By Nandhini Aug 10, 2021 01:09 PM GMT
Report

சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் போதாது. அது உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் அளிப்பதாக இருக்க வேண்டும். உணவு சமைக்கும் போது சுவையை அதிகரிக்கவும், உடல் நலம் மேம்படவும் சில பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன.

அப்படியான ஒரு உணவு பொருள் தான் பூண்டு. பூண்டில் அலிசின், அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட், சிஸ்டீன் சல்ஃபாக்சைடு ஆகியவை நிறைந்திருக்கிறது. இதில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிபங்கல் தன்மை இருப்பதால் உடல் இன்சுலின் சுரப்பிற்கு சரியாக எதிர்வினையாற்றும்.

இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிக சிறந்தது.

பொதுவாக பூண்டு முளைவிட்ட பிறகு, அதை நாம் மிக எளிதாகத் தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால், பல்வேறு ஆய்வில் வெளிவந்த முடிவின்படி, ஒரு விதை முளைக்க ஆரம்பித்துவிட்டால், அதற்குள் பல்வேறு புதிய புதிய காம்பவுண்ட்டுகள் உருவாகத் தொடங்குமாம்.

பூண்டு ஏன் முளைக்கிறது?

பூண்டு முளைப்பதற்கு முக்கிய காரணம் ஈரப்பதம். உண்மையில், பூண்டு புதிய தாவரங்களாக வளர வேண்டும். எனவே முளைப்பது இயற்கையான நிகழ்வு. முளைப்பதற்கு நிலைமைகள் சரியாக இருக்கும் வரை அவை வளர்ச்சியடையாது. அவை வந்தவுடன் புதிய வளர்ச்சி தொடங்குகிறது.

முளையிட்ட பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

கொழுப்பை குறைக்க

முளையிட்ட பூண்டிற்கு இயற்கையாகவே உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் தினமும் முளையிட்ட பூண்டை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து விடும்.

ரத்த அழுத்தம்

முளையிட்ட பூண்டை சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறையும். இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

மெட்டபாலிசம்

தினமும் முளையிட்ட பூண்டை சாப்பிட்டு வந்தால், பூண்டு முளைகள் நம்முடைய உடலின் மெட்டபாலிச செல் வளர்ச்சி மற்றும் செல் பாதிப்பு பிரச்சினைகளை சரிசெய்து, நம்முடைய உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும்.

பக்க விளைவுகள்

முளைத்த பூண்டு அதிக ஆபத்துக்களை ஏற்படுத்தாது. ஆனால், முளைத்த பூண்டை சாப்பிட்டால் சிலருக்கு இலேசான பக்க விளைவுகள் ஏற்படலாம். முளைத்த பூண்டை பச்சையாக சாப்பிட்டால், அது தலைவலியை ஏற்படுத்தும். ஆய்வுகளின்படி பூண்டை பச்சையாக சாப்பிட்டால் மூளையின் சவ்வு மறைப்புக்குச் சென்று தலைவலியைத் தூண்டும் நியூரோபெப்டைட்களை வெளியிட முக்கோண நரம்பைத் தூண்டக்கூடும்.   

முளையிட்ட பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க.... | Lifestyle Health