தினமும் இந்த 5 உலர் பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல்எடை கிடுகிடுவென குறையுமாம்!
உடல் எடை அதிகரிப்ப்பு என்பது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. உடல் எடை அதிகரிப்பினால் பல துன்பங்களுக்கு ஆளாவதால் உடல் எடையை குறைக்க பலர் ஜிம்மை நாடுகின்றனர். ஒரு சிலர் அறுவை சிகிச்சை உள்பட ஒருசில சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
உடல் எடை குறைக்கும் போது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடல் எடைக் குறைப்பு ஆரோக்கியமானதாக இருக்கும்.
அதுதான் முழுமையான டயட் விதிக்கு உட்பட்டதாகும். உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். உலர் பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.
பாதாம்
தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிட்டு வந்தால் உங்கள் பசியை போக்கிவிடும். இதனால், எங்கள் உடல் எடை விரைவாக குறைக்க உதவி செய்வதுடன், தொப்பை கொழுப்பையும் குறைக்க உதவும்.
உலர் திராட்சை
நீங்கள் பசியுடன் இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிடலாம். குறைந்த கலோரிகளைக் கொண்ட உலர் திராட்சை பசியை அடக்கும் பண்புகள் கொண்டுள்ளன. உடலில் உள்ள கொழுப்பு செல்களைக் குறைக்கின்றன.
முந்திரி
உடல் எடையை குறைக்க 5 முந்திரியை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க டயட் திட்டமிடும் போது முந்திரியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால், முந்திரியில் உள்ள புரதம் உங்கள் உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.
வேர்க்கடலை
வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை உடலில் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளன. வேர்க்கடலையை சாப்பிடுவது உடலுக்கு வலிமையைக் கொடுக்கிறது . எடை இழப்பிற்கும் உதவுகிறது.
வால்நட்ஸ்
பசியுடன் இருக்கும்போது வால்நட் சாப்பிட்டால், அது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் பசியில்லாமல் பார்த்துக்கொள்ளும். வால்நட் மூளையில் இருக்கும் இரசாயன செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. இது பசியின் உணர்வை குறைக்கிறது. தினமும் ஒரு கைப்பிடி அளவு ஊற வைத்த வால்நட்ஸ் சாப்பிடுவது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.