அடிக்கடி முகத்திற்கு ஃபேஸ் வாஷ் கிரீம் போட்டு கழுவினால் நல்லதா?

lifestyle-health
By Nandhini Aug 07, 2021 11:39 AM GMT
Report

நம் முகம் மென்மையான சருமம் கொண்டதால் முகத்திற்கு பயன்படுத்தக்கூடிய சோப்பு மிகவும் மிருதுவான தன்மையை கொடுப்பதாக இருக்கவேண்டும். ஒருசிலர் உடம்புக்கு பயன்படுத்தப்படும் சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவார்கள். அதனால் சருமம் வறண்டு ஒருவிதமான வறட்சியை ஏற்படுத்திவிடும்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம். இதனால் முகத்துக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

மேலும் முகத்தில் உள்ள எண்ணெய் பசைகள் நீங்கி விடும். வேலைகளை முடித்து மாலை வீட்டிற்கு திரும்பிய பிறகு முகத்தை கழுவ வேண்டியது முக்கியம். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவடையும்.

ஒவ்வொரு முறையும் முகத்தை சுத்தம் செய்யும் போது ஃபேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லது கிடையாது. ஏனென்றால், அதில் உள்ள ரசாயனப் பொருட்கள் சருமத்தில் இயற்கையாக இருக்கக்கூடிய மென்மையையும், பளபளப்பையும் கெடுத்துவிடுமாம்.

முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தால் டோனர் பயன்படுத்தி முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். சென்சிட்டிவான சருமமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். 

சுருக்கங்களை தவிர்க்க ஆன்டி-ஏஜிங் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வயிட்னிங் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். இதுபோன்று ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் போது முதலில் தண்ணீரில் முகத்தை கழுவி விட்டு, பின்னர் தேவையான அளவிற்கு பேஸ் வாஸ் சொலுஷன் எடுத்துக்கொண்டு முகத்தில் மெதுவாக கீழிருந்து மேல் புறமாக மசாஜ் செய்து பயன்படுத்த வேண்டும்.

அடிக்கடி முகத்திற்கு ஃபேஸ் வாஷ் கிரீம் போட்டு கழுவினால் நல்லதா? | Lifestyle Health