தலைமுடி கிடுகிடுவென வளர இதோ பாட்டி வைத்தியம்!

lifestyle-health
By Nandhini Aug 06, 2021 01:25 PM GMT
Report

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை.

அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.

தலைமுடி கிடுகிடுவென வளர இதோ பாட்டி வைத்தியம்! | Lifestyle Health

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியத்தை பார்ப்போம் - 

முடி வளர

செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலை, கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, நெல்லிக்காய், வெந்தயம் இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெயில் இவை அனைத்தையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாக அடர்த்தியாக வளரும்

மருதாணி

மருதாணி இலைகளை அரைத்து, தேங்காய் எண்ணையில் கலக்கி காய்ச்சி, வடிகட்டி தேய்த்து வர முடி செழித்து வளரும். கருவேப்பிலை அரைத்து, தேங்காய் எண்ணையில் கலந்து, காய்ச்சி தலையில் தேய்த்து வர முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளரும்.

செம்பருத்தி

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

வேப்பிலை

ஒரு பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து மறுநாளும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன் இருந்தாலும் ஒழிந்து போகும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இள நரை கருமை நிறத்திற்கு மாறும். முடியும் செழுமை பெறும்.

தேங்காய் பால்

தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்.