உடற்பயிற்சி செய்ய எந்த நேரம் சரியானதுன்னு தெரியுமா?
24 மணி நேரமும் உடல் நிலை ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. பல்வேறு மாற்றங்களை உடல் சந்திக்கிறது. இதை சர்கார்டியன் ரிதம் என்று சொல்வார்கள். உடலின் வெப்ப நிலை, வளர்சிதை மாற்ற விகிதம், தூக்கம் என அனைத்தையும் இந்த சர்கார்டியன் ரிதம்தான் கட்டுப்படுத்துகிறது.
இந்த சூழலில் உடற்பயிற்சியை காலையில் செய்வதும் மாலையில் செய்வதும் வெவ்வேறு மாதிரியான பலன்களை அளிக்கிறது. உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர்.
இந்த பயிற்சியினை காலை நேரத்தில் தான் அதிகமாக செய்கின்றனர். ஆனால் எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது தெரியுமா ? இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவு இரவு சாப்பிட்டு முடித்த பிறகு 10 மணியிலிருந்து 12 மணி நேரத்துக்கு நாம் சாப்பிடாமல் இருப்போம். இரவு முழுக்க உணவு இல்லாத நிலையில் தசைகள் இயங்க குறைந்த அளவிலேயே ஆற்றல் (குளுக்கோஸ்) இருக்கும். காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு தேவையான ஆற்றலை ஏற்கனவே சேமித்து வைத்த கொழுப்பிலிருந்து பெற முடியும்.
எனவே, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது. காலை பொழுதில்தான் நமது உடல் வளர்சிதை மாற்றப் பணிகளை தொடங்குகின்றன. இந்த சூழலில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க தூண்டுகோலாக்க அமைகிறது.
இதனால் செரிமான மண்டலத்தில் பிரச்சினை வந்துவிடும் என்று கவலைப்பட வேண்டாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு மாறுபாடுகளை கொண்டிருக்கும். இவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யவே கூடாது.
அதற்காக காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யக் கூடாது என்று இல்லை. சிறிது சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வது சிறந்தது. பொதுவாக, காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே மிகவும் நல்லது. காற்றில் ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம் என்பதால் நுரையீரல் உற்சாகமாக இருக்கும்.
உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.
மாலை
ஜிம்மில் சிறப்பாகச் செயல்பட முடியும். காலையில் செய்ய நேரம் இல்லை என்றால் மாலையில் வொர்க் அவுட் செய்வது நல்லது. வொர்க் அவுட் செய்யும் முன் வெறும் வயிற்றில் இருப்பது நல்லது.