காலை வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீங்க! இல்லைன்னா... பின்விளைவுகள் உங்களுக்குத்தான்!

lifestyle-health
By Nandhini Aug 05, 2021 11:58 AM GMT
Report

சிலருக்குக் காலையில் எழுந்ததுமே வயிற்றைக் கிள்ளுவது மாதிரி இருக்கும். கிடைக்கிற எதையாவது எடுத்துச் சாப்பிட்டு, பசி போக்குவது அவர்கள் வழக்கமாகவும் இருக்கும்.

பசி எடுக்காமலேயே எதையாவது சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள்.  இப்படிச் சாப்பிடும் உணவுகள் ஒருவேளை நமக்கு நன்மை அளிக்கலாம். மாறாக, வேறு பிரச்னைகளையும்கூட ஏற்படுத்திவிடலாம்.

காபி, டீ

இரவு வெகுநேரம் உணவு உண்ணாமல் உறங்குவதால், ஏற்கனவே வயிற்றில் அமிலம் அதிகமாக சுரந்திருக்கும். அப்போது, காபி/டீ பருகினால், இரைப்பையில் அலர்ஜி உண்டாகும். செரிமானம் பாதிக்கப்படும். வயிறு பொருமல் ஏற்படும். காபி நல்லதுதான். ஆனால் ஏதாவது நன்றாக உணவு சாப்பிட்டுவிட்டுப் பின்னர், காபி குடிக்கலாம்.

சோடா

சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

காரமான உணவு

காரமான உணவை உண்ணுவதால், இரைப்பையில் எரிச்சல் ஏற்படுத்தும். உணவு செரிமானம் ஆகாமல் போய்விடும். இனிப்பு காலையில் இனிப்பை சாப்பிடுவதால், உங்கள் இன்சுலின் அளவுகளை அதிகரித்து, நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும்.

மாத்திரைகள்

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியம் இல்லாதது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ளசேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கும். வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது. இது, இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும். இதய நோய்களை வரவழைத்துவிடும்.   

காலை வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீங்க! இல்லைன்னா... பின்விளைவுகள் உங்களுக்குத்தான்! | Lifestyle Health