வாரத்திற்கு 3 முறை இந்த துவையலை சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வருமாம்!

lifestyle-health
By Nandhini Aug 05, 2021 11:46 AM GMT
Report

நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் காய்களே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி உண்ண வேண்டும். பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப் பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளது. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். அதேபோல், பீர்க்கங்காய் துவையல் வாரத்திற்கு 3 முறை செய்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோக் கட்டுக்குள் வரும்.

வாரத்திற்கு 3 முறை இந்த துவையலை சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வருமாம்! | Lifestyle Health

தேவையான பொருட்கள் -

பீர்க்கங்காய் - 1

புளி- சிறிதளவு

உளுந்து- 2 ஸ்பூன்

துவரம்பருப்பு- 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 3

கறிவேப்பிலை- சிறிதளவு

பெருங்காயம் 1/2டீஸ்புன்

எண்ணெய்- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை -

வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்து, துவரம் பருப்பு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

பின்பு வெட்டி வைத்துள்ள பீர்க்கங்காயை அதில் போட்டு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு, மிக்ஸியில் வதக்கிய பொருட்களைப் போட்டு உப்பு, புளி, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான பீர்க்கங்காய் துவையல் ரெடி.