தினமும் 2 கொய்யாபழத்தை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மை நமக்குக் கிடைக்குமாம்!
பழங்களிலேயே விலை குறைவானதும் அனைவராலும் எளிதில் வாங்கி கூடியதுமான கொய்யாப்பழத்தில் குறிப்புகள் எதுவுமில்லை. நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை உறிஞ்சுவது பயன்படும் மக்னீசியம் கொய்யாவில் நிறைந்துள்ளது.
பொதுவாக நமக்கு நோய் ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியா பூஞ்சை போன்றவை மட்டுமில்லாது நமது உடலில் நோயை எதிர்த்துப் போராடும் திறன் குறைவாக இருப்பதே ஆகும். கொய்யாப் பழம் வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்ப மண்டலங்களில் பயிரிடப்படும் பழமாகும்.
இப்பழத்தில் உடல் ஆரோக்கியத்திற்கும், பற்கள் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் மிக முக்கியமான சத்தாக வைட்டமின் ‘சி’ இருப்பது சிறப்பாகும்.
தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -
சர்க்கரை நோயாளிகளுக்கு
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கொய்யா பலத்தினை உண்டு வந்தால் அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவு சீரடையும். கொய்யா பழத்தினை அதிக அளவு உட்கொண்டு வந்தால் உங்களின் செரிமான மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி பெற
கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இதனை தினமும் 2 உண்டு வரும்போது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இளமையாக இருக்க
கொய்யாபழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நீங்கள் தினமும் 2 கொய்யாப்பழத்தை உண்டு வந்தால் உங்கள் உடல் எப்பொழுதும் இளமையாக இருக்கும்.
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு
கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.
கண் பார்வை மேம்பாடு
தினமும் 2 கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால், கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்பார்வை ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.மேலும் இது கண் ஆரோக்கியத்தின் சீரழிவையும் தடுக்கிறது. கண்புரை மற்றும் மாகுலர் சிதைவின் தோற்றத்தையும் குறைக்கிறது.
இதய ஆரோக்கியம்
தினமும் 2 கொய்யாபழத்தை சாப்பிட்டு வந்தால், கொய்யாபழம் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்து கெட்ட கொழுப்பை குறைக்கும்.
உடல் எடையை குறைக்க
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து விடும். முகப்பொலிவை பெற கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி முகப்பொலிவை அதிகப் படுத்துகின்றன. தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மாற்றத்தை உணரலாம்.