வாழை இலையில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?
எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது.
பழங்காலத்திருந்தே நம் நாட்டின் சமையலில் மரங்கள் மற்றும் செடிகளிலிருந்து கிடைக்கும் காய்கள், கனிகள் போன்றவற்றை பயன்படுத்தி சமைத்து உண்டு வந்தனர், அதுமட்டுமில்லாமல் சில தாவரங்களின் வேர்கள், இலைகள் மற்றும் விதைகள் ஆகியவற்றையும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
பழந்தமிழ் இலக்கியங்களில் தெய்வீக மரமாக வாழை மரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உணவு பரிமாறும் தட்டாகவும், அலங்காரப் பொருளாகவும், படையல் விரிப்பாகவும் பயன்படும் இந்த வாழை இலையை தெரியாதவர்களே இருக்க முடியாது. வீட்டில் பாத்திரத்தில் சாப்பிடுவதை விட திருமண வீடுகளில் வாழை இலையில் சாப்பிட்டால் அதிகம் சாப்பிடுவோம்.
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
வாழையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -
அல்சர் நோய்
பாதிப்புக்குள்ளானவர்கள் அல்சர் நோய் பாதிப்பு அடைந்தவர்கள் தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்ட்டு வந்தால் அவர்களுடைய இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்கள் கரைத்து புதிய செல்களைத் தோற்றுவிக்கும் என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி பெற
வாழை இலை ஒரு இயற்கை கிருமி நாசினி, இதில் உணவருந்தும் போது உணவில் உள்ள நச்சு தன்மையை போக்குவதுடன் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. பசி உணர்வு உடலில் இருக்கும் சத்துக் குறைபாடுகள் மற்றும் மன அழுத்தங்கள் காரணமாக ஒரு சிலருக்கு பசி உணர்வே இல்லாமல் போகிறது. வாழையிலையில் அடிக்கடி உணவு சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பசி உணர்வு நன்கு தூண்டப்பட்டு, நன்றாக சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.
உணவு சத்துகள்
வேலைக்கு செல்பவர்கள் வாழை இலையில் தினமும் உணவை கட்டி எடுத்துச் சென்று சாப்பிட்டு வந்தால் உணவின் சத்துகள் குறையாமல் முழுவதுமாக கிடைக்க வழிவகை செய்கிறது வாழை இலை.
குழந்தைகளுக்கு
பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
அம்மை நோய்க்கு
சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். தீக்காயம் ஏற்பட்டவர்கள் தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.