அடடா.. வேப்ப எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? நீங்களே பாருங்க...
நமது நாட்டில் தோன்றிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நம் நாட்டின் பாரம்பரியமான மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்திருக்கின்றனர்.
வேப்ப மரம் இந்திய நாட்டின் பூர்விக மரம். பழங்காலந்தொட்டே மருத்துவத்தில் வேப்ப மரத்தின் பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. வேப்ப மரத்திலிருந்து உருவாக்கப்படும் வேப்ப எண்ணெய் அதிக நன்மைகள் கொண்ட எண்ணெய் ஆகும்.
இன்றைய நவீன வாழ்க்கை முறையால் வேம்பு நம் நேரடி பார்வையில் இருந்து விலகி மறைமுகமா நம் வாழ்வில் கலந்து உள்ளது , எப்படி என்ற உங்கள் கேள்விக்கு பதில், இன்றைய மருத்துவ துறையில் 80% வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது.
சைனஸ் தொல்லை
சைனஸ் தொல்லை நீங்க தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வேப்ப எண்ணெயின் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
இளைமை தோற்றம் பெற
வேப்ப எண்ணெயில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வாரத்திற்கு ஒரு முறை உடலில் நன்கு தடவி குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து இளைமை தோற்றத்தை அதிகரிக்கும்.
காயங்கள் குணமாக
உடலில் அடிப்பட்ட இடங்களில் வேப்ப எண்ணெயை தேய்த்தால் சீக்கிரம் கிருமிகள் இறந்து காயங்கள் குணமாகும் தன்மை கொண்டது. பொடுகு தொல்லை நீங்க தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.
கொசுவை விரட்ட
வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்தால் கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்ப எண்ணையில் விளக்கை ஏற்றினால் கொசுகள் வீட்டை விட்டு ஓடிவிடும். சில சொட்டு வேப்ப எண்ணெயை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.
தலைமுடியை பாதுகாக்க
வேப்ப எண்ணெயில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை பல தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது.
முகம் பளிச்சிட
தினமும் தூங்க செல்லும் முன்னர் சருமத்தில் வேப்ப எண்ணெய்யை தடவ வேண்டும். இதனால் பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.
சர்க்கரை நோய்க்கு
தினமும் சிறிது வேப்ப எண்ணெய் சாப்பிட்டால் நீரிழிவு எனும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
தோல் வறட்சி நீங்க
குளிர்காலத்தில் வேப்ப எண்ணெயை சூடாக்கி அதில் கட்டி கற்பூரத்தை பொடித்துப் போட்டு அந்த எண்ணெயை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்றாக சூடு பறக்க தேய்த்தால் வறட்சி நீங்கும்.