இந்த 5 பழங்களை சாப்பிட்டு வந்தால் உங்கள் சருமத்திற்கு அழகை அள்ளித்தருமாம்!
எல்லோருக்குமே இளமை அழகைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக என்னென்னவோ செய்கிறார்கள். யார், யாரோ கூறும் யோசனைகளைப் பின்பற்றுகிறார்கள், பலவித அழகுசாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், அவ்வப்போது அழகு நிலையத்துக்கும் சென்று வருகிறார்கள்.
ஆனால் கன்னாபின்னாவென்று அழகு முயற்சிகளை மேற்கொண்டால் செல்கள் பாதிக்கப்பட்டு விரைவில் தோல் சுருங்கிவிடும். மாறாக, சரியான உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இளமை எழிலைக் காக்கலாம்.
பழங்களில் அதிக அளவு சத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளன. பொதுவாக பழங்களை சாப்பிட்டால் விரைவாக செரிமானம் ஆகும். ஏனெனில் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
அதுபோன்று பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. முக்கியமாக பழங்களில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன் உள்ளது.
சருமத்திற்கு அழகை தரும் 5 சிறந்த பழங்களைப் பற்றி பார்ப்போம் -
ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கும் சருமத்திற்கும் பல நன்மைகள் தரும். ஆரஞ் பழத்தை அதிக அளவில் முக அழகிற்கு பயன்படுத்துவர். ஏனெனில் அதில் அதிக அளவு விட்டமின் எ, விட்டமின் சி, விட்டமின் பி2 ஆகியன உள்ளன. இரவில் தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் அரை டம்ளர் ஆரஞ் பழச்சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
மாதுளை
அதிக சத்துக்களை கொண்டுள்ள மாதுளை சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க தினமும் மாதுளை பழச்சாறு எடுத்துக் கொள்வது நல்லது. மாதுளையில் நார்ச்சத்து, நீர்சத்து, மாவுச்சத்து என அதிக அளவுச் சத்துக்கள் உள்ளன. இந்தப் பழத்தை இதய நோயாளிகள் சாப்பிடலாம். உடலில் உள்ள நச்சுக்களை இது வெளியேற்றும் எனவே நாவறட்சியைப் போக்கி உடல் சோர்வை நீக்கும்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் என்னும் பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர் வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். பாதி ஆப்பிளை மிக்சியில் விழுதாக அரைத்து அதனுடன் தேன் மற்றும் ஓட்ஸ் கலந்து சருமத்தில் பூசி வரலாம். அது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவை உருவாக்கும்.
பப்பாளி
முகப்பரு உள்ளவர்களுக்கு பப்பாளி நல்ல தீர்வை தரும். சருமத்தை பொலிவாக்குவதில் பப்பாளி முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளியில் உள்ள நொதியானது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதாக நீக்கிவிடும். பப்பாளி பழத்தில் விட்டமின் சி, பீட்டாக்கரோட்டீன், நார்ச்சத்து ஆகியன அதிகமாகவே உள்ளது. நரம்புத்தளர்ச்சி இருப்பவர்கள் பப்பாளி பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். சருமம் மிருதுவாகும்.
ஆப்ரிக்காட்
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஆப்ரிக்காட் சிறந்த பலனை தரும். இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்து அதில் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.