சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் குதிரைவாலி வெங்காய அடை! ருசியாக செய்வது எப்படி?
lifestyle-health
By Nandhini
4 years ago

Nandhini
in ஆரோக்கியம்
Report
Report this article
குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மேலும், செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிடவற்றை குணப்படுத்தும் ஆற்றல் குதிரைவாலிக்கு உண்டு. இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது.
இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்கும் தன்மை குதிரைவாலிக்கு உள்ளது.
தேவையான பொருட்கள்-
- குதிரைவாலி அரிசி - 2 கப்,
- துவரம்பருப்பு - 1 கப்,
- உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
- காய்ந்தமிளகாய் - 10,
- நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
- கடலைப்பருப்பு - 1 கப்,
- பூண்டு - 10 பல்,
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 4 டேபிள்ஸ்பூன்,
- சீரகம் - 1 டீஸ்பூன்,
- பெரிய வெங்காயம் - 2
செய்முறை -
- குதிரைவாலி அரிசி, பருப்பு வகைகளை தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், மிக்சியில் முதலில் குதிரைவாலி அரிசி, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்தெடுக்க வேண்டும்.
- பாதி அரைந்ததும் பருப்பு வகைகள், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை சேர்த்து லேசாக வதக்கி, அடை மாவில் கொட்டி கலக்க வேண்டும். பின்னர், மாவை புளிக்க விட வேண்டாம்.
- தோசைக்கல்லை சூடாக்கி மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெயை விட்டு இருபுறமும் வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து விட வேண்டும்.
- சூடாக சாப்பிட்டால் அடை மிகவும் அருமையாக இருக்கும்.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
