உங்கள் மரணம் எப்போது..? 78% துல்லியமாக கணிக்கும் AI தொழில் நுட்பம் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
மரணத்தை 78% துல்லியமாக கணிக்கும் AI தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரணத்தை கனிக்கும் ஏஐ
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பம் மனிதர்களின் வேலைகளை எளிமைப்படுத்தி உதவியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது.தற்போது இந்த வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு சென்று, மரணத்தை கணிக்கும் AI தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களின் மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் AI இறப்பு கால்குலேட்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த AI இறப்பு கால்குலேட்டரின் பெயர் Life2vec. இந்த AI மற்ற தொழில்நுட்பங்களை விட 78% துல்லியமாக மரணத்தை கணிக்கிறது.
துல்லியமான கணிப்பு
அதற்காக ஒரு மனிதனின் வாழ்க்கை வருமானம், தொழில், குடியிருப்பு மற்றும் உடல்ரீதியான பிரச்னைகள் ஆகிய விவரங்களை சேகரித்து மரணத்தை கணக்கிடுகிறது. மேலும் இதை எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை கண்டுபிடிப்பதற்காகவும் பயன்படுத்த உள்ளனர்.
கடந்த 2008 மற்றும் 2020க்கு இடையில் 6 மில்லியன் டேனிஷ் மக்களின், மக்கள்தொகையை கணிப்பதில் life2vec-ஐ பயன்படுத்தியுள்ளனர். அப்போது யாரெல்லாம் குறிப்பிட்ட 4 வருடத்திற்கு மட்டும் உயிர்வாழ்வார்கள் என்பதை Life2vec AI துல்லியமாக கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் எப்போது இறப்பார்கள் என்ற விவரம் வழங்கப்படவில்லை என்றும் இந்த AI இன்னும் யாருடைய பயன்பாட்டிற்கும் வழங்கப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்..