உங்களுக்கு அடிக்கடி வறட்டு இருமல் ஏற்படுகிறதா? - இதோ கைவைத்தியம்!

health remedies whooping cough
By Anupriyamkumaresan Jun 16, 2021 08:43 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in ஆரோக்கியம்
Report
207 Shares

 இந்த கொரோனா காலக்கட்ட்டத்தில் ஏராளமானோர் இருமலாலும், வறட்டு இருமலாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,.

இதோ வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே இதை சீர் செய்யலாம்..

பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.

உங்களுக்கு அடிக்கடி வறட்டு இருமல் ஏற்படுகிறதா? - இதோ கைவைத்தியம்! | Life Style Health Whooping Cough Relief

ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.

வெங்காயத்தை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நாளடைவில் பறந்து போய்விடும்.

தேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள், வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

உங்களுக்கு அடிக்கடி வறட்டு இருமல் ஏற்படுகிறதா? - இதோ கைவைத்தியம்! | Life Style Health Whooping Cough Relief

அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள வலி நிவாரண பண்புகள், தொண்டைச் சுவற்றில் இருக்கும் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும். அதிலும் கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.