அடிக்கடி தலைவலி ஏற்படுகிறதா? இதை சாப்பிட கூட வேண்டாம் நுகர்ந்து பாத்தாலே போதும்! புற்றுநோய் கட்டியே கரைக்கும் அளவு நன்மை!
பெரும்பாலும் சமையலறையில் உள்ள கிராம்பு பிரியாணிக்கும், குழம்புக்கும் மட்டுமே பலரது வீட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதை யாரும் வேறு எதற்கும் உபயோகப்படுத்துவதே இல்லை. கிராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது.
நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம். அப்படி தினமும் 2 கிராம்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி :
கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலை எந்த நோய்த்தொற்றுகளும் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். அதோடு நோய்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது.
தலைவலிக்கு நிவாரணி :
கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தலைவலிக்கு ஒரு அற்புதமான தீர்வாக இருக்கிறது.எனவே வலி நிவாரணத்திற்காக நீங்கள் அவற்றை உட்கொள்ளலாம் அல்லது ஒரு கிளாஸ் பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம். கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும்.
செரிமாணம் :
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, செரிமான மண்டலம் சீராக இயங்க வேண்டும். அதற்கு காலையில் கிராம்பை உட்கொள்வது செரிமான பிரச்சினைகளுக்கு உதவும். கிராம்பு செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறத. எனவே மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது.
பற்களுக்கு உறுதி :
பல்வலியைத் தடுக்க கிராம்பு எண்ணெய் பொதுவாக பற்களில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகளை உட்கொள்வது பல்வலி ஈறு வலியைக் குறைக்கவும் உதவும். கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்ய உதவுகிறது. அனைத்து பல் துலக்கும் பேஸ்டுகளிலும் தற்போது கிராம்புகள் சேர்க்கப்பட்டு வருகிறது. கிராம்புகள் பற்களுக்கு அவ்வளவு நன்மைகள் அளிக்கும்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் :
நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்க்க வேண்டும். கிராம்பு உங்கள் உடலில் இன்சுலின் போல வேலை செய்கிறது. அதாவது, இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன.
புற்றுநோயை தடுக்கிறது :
கிராம்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் உள்ளன. அவை உங்கள் உடலை நுரையீரல், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. கிராம்புகளில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் உடலில் புற்றுநோய் செல்கள் இறப்பை அதிகரிக்கும்.
சுவாசப்பாதை ஆரோக்கியம் :
ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு உதவும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது கிராம்பு சுவாசக் குழாயில் உண்டாகும் அழுத்தத்தை தணிக்கிறது மற்றும் எந்த பாக்டீரியாக்களும் உங்கள் நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.