உங்கள் சருமம் வயதாகிறதே என்று கவலையா? நல்ல ஆன்டி ஏஜிங் க்ரீம்களை எவ்வாறு கண்டுபிடிப்பது!
இன்று அனைவரும் வேலைக்கு செல்ல கூடிய சூழலில் இருக்கிறோம். இந்த நிலையில், நம் சருமம் வயதாகிறதே என்ற கவலை பலரிடம் இருந்து வருகிறது.
இதற்கு சரும மருத்துவர்கள் சில ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இன்றைய பெண்கள் அவர்களுடைய சருமம் சீக்கிரம் வயதாகுவதை அவர்கள் விரும்பவில்லை.
இதனால் அவர்கள் சருமம் வயதாகுவதை தடுக்கும் ஆன்டி ஏஜிங் க்ரீம்களை நாடிச் செல்கின்றனர். தற்போது மார்க்கெட்டுகளில் ஆன்டி ஏஜிங் க்ரீம் என்ற பெயரில் நிறைய க்ரீம்கள் இருக்கின்றன.
எனவே உங்க சருமத்திற்கு ஏற்ற ஆன்டி ஏஜிங் க்ரீமை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். நிறைய பெண்கள் இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை.
ஆனால் உங்க சருமத்திற்கு ஒத்து வராத க்ரீம்களை தேர்ந்தெடுத்து போடும் போது அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் ஆன்டி ஏஜிங் க்ரீம்களை தேர்ந்தெடுக்கும் போது அதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறித்து நீங்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.
க்ரீம்களின் லேபிள்களில் உள்ள அட்டவணையை நீங்கள் தவறாமல் படிப்பது அவசியம்.
ஆன்டி ஏஜிங் க்ரீமில் ரெட்டினோல் என்ற பொருள் காணப்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது சரும செல்களை பாதிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை தடுக்கிறது. இது சரும சுருக்கங்களை தடுக்கிறது.
விட்டமின் சி சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த ஆன்டி ஏஜிங் க்ரீமில் விட்டமின் சி சேர்க்கப்படுகிறது.
க்ரீன் டீ, பிளாக் டீ போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் அதிகளவு காணப்படுகிறது. க்ரீன் டீ சாறு சரும சுருக்கங்களை போக்கும்.
திராட்சை விதைச் சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.
சன்ஸ்கீரின், சூரிய ஒளி பாதிப்பில் இருந்து சருமத்தை காக்க உதவுகிறது.
நீங்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என சரும க்ரீம்களை பயன்படுத்துவது அவசியம்.
அதே மாதிரி ஆன்டி ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு நீங்கள் பழைய தோற்றத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.