வில் மாதிரி புருவம் வேணுமா - இதோ அதற்கான ஸ்பெஷல் சீரம் வீட்டிலேயே செய்யலாம்!
முகத்தில் முக்கிய அழகாக திகழ்வது நமது கண்கள் தான். கண்களை அழகாக காட்டுவது அடர்த்தியான புருவமும், வில் போன்ற புருவமும் தான்.
இப்படிப்பட்ட புருவத்தை எவ்வாறு பெற வேண்டும் என்பதை பார்க்கலாம். எவ்வித கெமிக்கலும் சேர்க்காமல் நம் வீட்டிலிருந்தே இந்த சீரத்தை தயாரிக்கலாம்.
ரோஸ்மேரி சீரம்:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீரை எடுத்து சூடுபடுத்தவும். அதில் சிறிது ரோஸ்மேரி இலைகளை சேர்க்கவும். அவை உலர்ந்த ரோஸ்மேரி இலைகளாக இருந்தாலும் கூட பரவாயில்லை. ஒரு கப் தண்ணீர் பாதியாக குறையும் வரை தண்ணீரைக் கொதிக்க விடவும். பின்னர் ஆறியவுடன் அதனை வடிகட்டி, அதில் ஆமணக்கு எண்ணெயைக் கலக்கவும். இதனை ஒரு ஜாடியில் சேமித்து வைத்துக் கொண்டு கூட நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கலவையை கண்ணின் இமை மற்றும் புருவங்களில் பருத்தித் துணியினைக் கொண்டு மெதுவாகத் தடவினால் போதுமானது. தலை முடிக்கு மட்டுமின்றி ரோஸ்மேரி, கண் இமை மற்றும் புருவ முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
மிளகுக் கீரை சீரம்:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதனுடன் மிளகுக் கீரை இலைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் அதனுடன் சில துளிகள் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து குறைந்த அளவு தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் ஆறியவுடன் அதனை வடிகட்டிக் கொள்ளவும். மேலே ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்துவது போலவே இதனையும் பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலை சீரம் :
[
ஒரு வாணலியில் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைக்கவும், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் கறிவேப்பிலையை போடவும். கறிவேப்பிலை சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை தண்ணீரை கொதிக்க வைத்து பின்னர் ஆற விடவும். ஆறிய பின் அந்த நீரை வடிகட்டி அதில் வைட்டமின் ஈ எண்ணெய் சில துளிகள் கலக்கவும். இந்த சீரத்தை உங்கள் கண் இமைகள் மற்றும் புருவங்களை சுற்றி தடவவும்.
இயற்கை முறை சீரத்தை பயன்படுத்தும் முன் நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, சிறந்த முடிவுகளைப் பெற நீங்கள் இந்த சீரத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். அல்லது தினமும் தூங்கச் செல்வதற்கு முன்னும் இதனை பயன்படுத்தலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி அடர்த்தியான வில் போன்ற புருவத்தை இயற்கையாகவே பெற முடியும்.