அய்யோ! சாப்பிட்டவுடன் தூங்கச் சென்றால் இவ்வளவு கெடுதியா? இத பாருங்க..!
இரவு நாம் உறங்கும்போது நமது உடல் உறுப்புகளும் ஓய்வெடுக்கின்றன. ஆனால் தாமதமாகவோ அல்லது செரிக்காத உணவையோ உண்டுவிட்டு உறங்குவதால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அப்படி ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் அறிந்துக்கொள்வதன் மூலம் அந்த தவறுகளை செய்யாமல் இருக்க முடியும். நமது ஊர்களில் பல கிராமங்களில் நேரத்திற்கு சாப்பிட்டு சரியான நேரத்திற்கு படுத்து உறங்குவதை பார்த்திருப்போம். ஆனால் நகரங்களில் அதிகம் இந்த முறைகள் பின்பற்றப்படுவதில்லை. பலர் சரியான நேரத்திற்கு உண்பதில்லை. இரவு நேரங்களில் தூங்கும் சமயத்தில் தான் அவர்கள் உணவுகளை உண்கின்றனர்.
நள்ளிரவு உணவு:
இப்படி இரவு உணவுகளை கால தாமதமாக உண்பது உங்கள் உடல் சுகாதாரத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதே போல எளிதில் செரிமானம் ஆகாத ஆரோக்கியமற்ற உணவுகளும் உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம். உறங்குவதற்கு முன்பு இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது உங்கள் உடல் எடை அதிகரிப்பில் துவங்கி ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் உடலில் சர்க்கரை அளவையும் இது அதிகரிக்கிறது என கூறப்படுகிறது. எனவே உறங்குவதற்கு முன்பு உணவு உண்பதில் நாம் கவனம் செலுத்தி ஆக வேண்டும்.
குறைந்த கொழுப்பு:
நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால் முதலில் உடல் கொழுப்பை குறைப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
படுக்கைக்கு செல்வதற்கு முன்பு தேவையற்ற திண்பண்டங்களை தவிர்க்கலாம். 2020 இல் நடத்திய ஒரு ஆய்வின்படி 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாலையில் உணவை
தாமதமாக சாப்பிடும்போது நேரத்திற்கு சாப்பிடுபவர்களை காட்டிலும் குறைவான அளவிலேயே அவர்கள் உடலில் கொழுப்பு எரிக்கப்படுகிறது. எனவே குறைந்த கலோரி
மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை இரவு நேர உணவாக உண்ணலாம்.
எடை அதிகரிப்பு:
எடை இழப்பிற்கு பதிலாக எடை அதிகரிப்பை விரும்புபவர்கள் தங்கள் இரவு உணவை தாமதமாக உட்கொள்ளலாம். 2020 ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வின்படி மாலை 6 மணிக்கு பதிலாக இரவு உணவை இரவு 10 மணிக்கு உண்பவர்கள் குளுக்கோஸ் ஏற்றுக்கொள்ளும் திறன் அதிகமாகவும் ஆக்ஸிஜனேற்ற விகிதத்தை குறைவாகவும் கொண்டுள்ளனர்.
நிதானமான தூக்கம்:
நாம் உண்ணும் இரவு நேர உணவும் காலை நேர சோர்வும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என தெரியுமா? 2011 இல் வெளியான ஒரு ஆய்வின்படி 52 வயதானவர்களில் இரவு தாமதமாக உணவு உண்பவர்கள் காலையில் தூக்க கலக்கத்தை அல்லது சோர்வை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே ஒருவர் ஆரோக்கியமான அதிகாலையை பெற வேண்டும் எனில் அவர்கள் முதலில் இரவு உணவை சரியான நேரத்திற்கு உண்பவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் விரைவில் செரிக்காத உணவை எடுத்துக்கொள்ளும்போது அதுவும் கூட செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி தூக்கம் வராமல் செய்கிறது. எனவே விரைவில் செரிமானம்
ஆக கூடிய உணவையே நாம் இரவு உணவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.