நம் சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் மாற்ற சூப்பரானா இயற்கை பேஷியல் டிப்ஸ்!
முகத்திற்கு அவ்வப்போது ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் என்று செய்ய வேண்டும். அதிலும் வீட்டுச் சமையலறையில் இருக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டே முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தின் ஆரோக்கியம் அதிகரித்து, சருமம் அழகாகவும் பொலிவோடும் இருக்கும்.
கடலைமாவு பேஷியல்
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.
இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.
வோட்கா பேஷியல்
இரவு தூங்குவதற்கு முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள். காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.
தக்காளி பேஷியல்
ஒரு தக்காளி பழத்தை மிக்சியில் அரைத்து ஜுஸாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடவும். தக்காளி ஜுஸ், வெள்ளரிக்காயும் முகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய் பிசுபிசுப்பை போக்கி, முகத்தை பளபளக்கச்செய்யும்.
வாழைப்பழம் பேஷியல்
வாழைப்பழத்துடன், 2 டீஸ்பூன் தேன், கெட்டியான தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். முகத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸைடு முகத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும்.
பேரீட்ச்சைப்பழம் பேஷியல்
பேரீச்சம் பழத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றைச் சேர்த்து முகம் முழுவதும் தடவி, 10 நிமிடம் வைத்திருந்து கழுவவும். நன்கு காய்வதற்கு முன்பு எடுத்துவிடவேண்டும். ப்ளீச் செய்தது போல் முகம் பளிச்செனக் கோதுமை நிறமாக மாறும்.
முட்டை ஃபேஷியல்
உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், முட்டையின் மஞ்சள் கருவை நன்கு அடித்து அதனை முகத்தில் தடவி மாஸ்க் போடுங்கள். ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.
புதினா பேஷியல்
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.
ஆரஞ்சு தோல் பேஷியல்
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.