இந்த கிழங்கை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடுமாம்! மக்களே உஷார்

life-style-health
By Nandhini Aug 02, 2021 10:23 AM GMT
Report
227 Shares

 நாம் அடிக்கடி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. இதில் கூட ஆபத்து உள்ளது என உணவியல் நிபுணர் கூறுகின்றனர்.

உருளை கிழங்கில் முளைகட்டியோ அல்லது பச்சை நிற திட்டுகளோ இருந்தால் அவை விஷமாக மாறிவிடும் இந்த கிழங்குகள் தோல் சுருங்கியும் இருக்கும் இந்த கிழங்குகள் ருசியாக இருக்காது சிறிது கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும்.

இந்த கிழங்குகளை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பக்க விளைவுகள் ஏற்படும். முளைக்கட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. உருளைக்கிழங்கில் முளைக்கட்டினால், அதை சாப்பிடக்கூடாது என்பதற்கான ஓர் அறிகுறியாகும். மேலும் உருளைக்கிழங்கு முளைக்கட்டுவதால், அதனுள் ஒருசில இரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

தலைவலி, வாந்தி

சூரிய ஒளி அதிகமாக இந்த உருளை கிழங்கின் மீது படும் போது தான் இந்த பச்சை நிற திட்டுகள் ஏற்படுகின்றன. இது போன்ற உருளை கிழங்கை அதிகம் எடுத்து கொண்டால் தலை வலி, வாந்தி, வயிற்று போக்கு போன்றவை ஏற்படும்.

நீரிழிவு நோய்

முளைக்கட்டிய உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் நன்கு முற்றிய உருளைக்கிழங்கு மென்மையாக இருப்பதற்கு, அதில் உள்ள கார்போஹைட்ரேட் சர்க்கரையாக மாற்றமடைந்திருப்பது தான்.

கர்ப்பிணிகளுக்கு

முளைவிட்ட மற்றும் பச்சை நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் போது கருச் சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் பிறக்கும் குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது.

உயிருக்கு ஆபத்து

முளைவிட்ட உருளைக்கிழங்கை உட்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகிறது. இதய பாதிப்புகள் முதல் வயிற்று கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மிக தீவிர நிலையில் உயிரிழக்கும் அபாயமும் உள்ளன. பிறப்பு குறைபாட்டிற்கான அபாயமும் அதிகரிக்கின்றன. 

இந்த கிழங்கை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடுமாம்! மக்களே உஷார் | Life Style Health