வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?
கற்றாழை செடி ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட மிகவும் அற்புதமான ஓர் செடி. இந்த செடியின் இலைகளில் இருந்து வெளிவரும் ஜெல் பல்வேறு சரும பிரச்சனைகளை சரிசெய்யப் பயன்படுத்தப்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும்.
ஏனெனில் இந்த ஜெல்லில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இந்த ஜெல்லைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால், சரும அழகு பாதுகாக்கப்படுவதோடு, அதிகரிக்கவும் செய்கிறது.
கற்றாழை சாற்றில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.
உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கற்றாழை சாற்றில் அதிக அளவில் உள்ளன.உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் உள்ள பாதிப்புகளை சரிசெய்து புனரமைப்பதற்கு, கற்றாழை சாற்றில் உள்ள சத்துக்கள் துணை புரிகின்றன.
கற்றாழை ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள் :
- சோற்றுக்கற்றாழை ஜெல் - 2ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- தேன் - 1 ஸ்பூன்
செய்முறை :
- சோற்றுக் கற்றாழை தோலை முழுவது மாக நீக்கி அதில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழை ஜெல்லை மிக்சியில் போட்ட அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த ஜூஸில் தேன் கலந்து சாப்பிடவும். சுவையான சோற்றுக் கற்றாழை ஜூஸ் ரெடி.
உடல் எடை
குறைய கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
இரத்த அழுத்த பிரச்சனை
தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும். இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் காமாலை
வயது ஏற ஏற ஜீரண மண்டலத்தில் பிரச்சனைகள் உண்டாவது நமக்கு புலப்படுகிறது. ஆனால் நீங்கள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்துக் கொண்டு வந்தால் ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி ஜீரண உறுப்புகள் இளமையாகவே இருக்கும்.
ஹார்மோன் ஒழுங்குபடுத்த
ஹார்மோன் சம நிலையில்லாமல் இருந்தால் மொத்த உடல் இயக்கத்திலும் பாதிப்பு உண்டாகும். இதற்கு இந்த ஜூஸ் நல்ல மருந்து. ஹார்மோன் சுரப்பை சீர்படுத்துகிறது.
ரத்த சோகை
ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்தி பாருங்கள். ஆச்சரியப்படும்படி மாற்றம் உண்டாகும். அதுமட்டுமல்லாது கல்லீரல் நோய்கள், என பல நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.
குடலை சுத்தப்படுத்த
தினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. மேலும், குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது.
சருமம்
உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள்மறைந்து போகும்.