உதட்டின் மேல் வளரும் அரும்பு மீசையை நீக்க இதோ பாட்டி வைத்தியம்!

life-style-health
By Nandhini Jul 31, 2021 10:29 AM GMT
Report

பெண்களுக்கு உதட்டிற்கு மேலே முடி வளர்ந்தால், அது அப்பெண்ணின் தோற்றத்தை விசித்திரமாக காட்டுவதால், பலர் அப்பெண்ணையே கூர்ந்து கவனிப்பார்கள். இதுவே பல பெண்களுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கும். பெண்களுக்கு இம்மாதிரி உதட்டிற்கு மேலே முடி வளர்வதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம்.

பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று உதட்டிற்கு மேல் உள்ள முடியை பிடுங்கி நீக்குவார்கள். பொதுவாக முடியை பிடுங்கினால் அவ்விடத்தில் முடி அதிக அளவில் வளர ஆரம்பிக்கும்.

எனவே உதட்டிற்கு மேல் வளரும் முடியை பிடுங்காமல், வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, உதட்டிற்கு மேல் மாஸ்க் போட்டு வந்தால், அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும்.

உதட்டின் மேல் வளரும் அரும்பு மீசையை நீக்க இதோ பாட்டி வைத்தியம்! | Life Style Health

கடலை மாவு மற்றும் தயிர்

கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

உருளைக் கிழங்கு

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாணலியில் சேர்த்து 1 நிமிடம் கிளறி பின் அதனை இறக்கி குளிர வைத்து காட்டன் பயன்படுத்தி உதட்டின் மேல் தடவி வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இதனாலும் முடியை நீக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

குப்பை மேனி

குப்பை மேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் ஆகிய வற்றை சேகரித்து கொண்டு, இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். தூங்க போகும் முன் மேல் உதட்டில் பூசி வர வேண்டும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.