முடி அடர்த்தியாக வளர கறிவேப்பிலை சாதம் - சுவையாக செய்வது எப்படி?
பெண்களை அழகாக காட்டுவதில் கூந்தலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தலை விரும்பாத பெண்களே கிடையாது. முடி குறைவாக இருக்கிறது என கவலைப்படும் பெண்களை விட அடர்த்தி குறைவாக இருக்கிறது என கவலைப்படும் பெண்களே அதிகம்.
இப்போதையை காலத்தில் அழகு, பராமரிக்க முடியவில்லை மற்றும் நேரம் செலவிட முடியவில்லை என முடியை சிறிதாக வெட்டி கொள்வதால் நீளத்தை விட அடர்த்தியே கவனத்தில் கொள்ளப்படுகிறது.
இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. தலைமுடி கருகருவென வளர கறிவேப்பிலை சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சினைகளை நீங்கி விடும்.
சுவையாக கறிவேப்பிலை சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு
பச்சரிசி - 1 ஆழாக்கு
கடலைப் பருப்பு - 1டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 15
நெய் - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்புத்தூள் - தேவையான அளவு
செய்முறை :
- பச்சரிசியை நன்றாக அலசி சுத்தம் செய்து போதுமான அளவு தண்ணீர் விட்டு உதிரியாக வேக வைத்து கொள்ள வேண்டும்.
- கறிவேப்பிலையை உருவிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடாக்க வேண்டும்.
- பிறகு, நெய் சூடானதும் உருவி வைத்திருக்கும் கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
- வாணலியில் போதுமான அளவு நெய்யை விட்டு கடுகு, உ.பருப்பு போட்டு தாளித்து முந்திரிப் பருப்பு, கடலைப் பருப்பு சிவக்க வறுக்க வேண்டும்.
- இவற்றை உதிரியாகப் பரப்பி வைத்திருக்கும் சாதத்தில் கலந்து கறிவேப்பிலைத்தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாற வேண்டும்.
- சூப்பரான கறிவேப்பிலை சாதம் ரெடி.