அப்படியா... தினமும் ஊற வைத்த சப்ஜா விதையை சாப்பிட்டு வந்தால் கிடுகிடுவென உடல் எடையை குறைந்துவிடுமாம்?
சப்ஜா விதைகள் பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் எள் போன்று இருக்கும். நம் முன்னோர்கள் காலம் காலமாய் பயன்படுத்தி வந்த திருநீற்று பச்சிலை என சொல்லக்கூடிய மூலிகை செடியின் விதைதான் இந்த சப்ஜா விதைகள்.
சப்ஜா விதைகளை சாப்பிடுவதனால் நீண்ட நேரம் பசி உணர்வின்றி இருக்க முடியும். இதனால் அடிக்கடி நொறுக்குத்தீணிகளை சாப்பிடுவதனால் உண்டாகும் உடல் பருமனை கட்டுக்குள் வைக்க இயலும்.
சப்ஜா விதைகளில் ஒமேகா 3 அமிலம் அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு தேவையான மெட்டபாலிச அளவை அதிகரித்து, உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. சப்ஜா விதைகளில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.
இந்த விதைகள் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் எடை இழப்புக்கு அவசியமான தாதுக்கள் ஆகும்.
பசியைக் கட்டுப்படுத்தும்
சப்ஜா விதைகளை நீரில் ஊற வைக்கும் போது, அவை செரிமான நொதிகளை உருவாக்கும். இந்த நொதிகள் உங்களின் செரிமானத்தை பலப்படுத்தும். அத்துடன் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும், பசியைக் குறைப்பதோடு, பசிப்பது போன்ற உணர்வினையும் இது தடுக்கும்.
உடல் சூட்டை குறைக்கும்
உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையினை இரவில் படுக்கைக்கு முன் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த சப்ஜா விதையுடன் பால் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்தால் உடல் சூட்டிற்கு மிகவும் நல்லது. மேலும் உஷ்ணத்தினால் ஏற்படும் கண் எரிச்சலையும் குணப்படுத்தும்.
உடல் எடை குறைய:
முதலில் சப்ஜா விதைகளை அரை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது அது நன்றாக ஊறியிருக்கும். அதனுடன் தண்ணீர் சேர்த்து எலுமிச்சம் பழ ஜூஸை சேர்த்து மற்றும் தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து எந்த வேலையிலும் குடிக்கலாம்.
இவ்வாறு நீங்கள் சாப்பிட்டு வரும்பொழுது உங்களுக்கு பசி தன்மை குறையும். அதனால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.