விபத்தில் அடிபட்டவர்களுக்கு உடனே ஏன் தண்ணீர் தரக்கூடாதுன்னு தெரியுமா?
life-style-health
By Nandhini
விபத்தில் காயம் அடைந்தவர்களை பார்த்தவுடன் சிலர் ஓடி வந்து தண்ணீர் எடுங்க... தண்ணீர் கொடுங்க... ஒருவிதமான பதட்டதுடன் அடிப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வார்கள். ஆனால், விபத்தில் காயம் அடைந்தவர்களக்கு உடனே தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று எந்த மருத்துவ விதியும் கிடையாது.
சாலையில் அடிப்பட்டவர்களுக்கு தண்ணீர் கொடுக்கலாமா? அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம் -
- சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணங்கள் பெரும்பாலும் அதிக இரத்த சேதத்தினாலேயே ஏற்படுகின்றது. இரத்தம் வெளியேறுவது வெளிக் காயங்களாலும் கூட நிகழலாம், வெளியே தெரியாத உள் காயங்களாலும் நிகழலாம்.
- விபத்தில் காயம் அடைந்தவர்களை (அவர் இறந்திருந்தாலும்) அருகில் இருப்பவர்கள் எந்த அச்சமின்றி தாராளமாகத் தொட்டுத் தூக்கலாம்.
- இப்படி தொட்டுத் தூக்கினால், காவல்துறையினரோ, மருத்துவர்களோ நிச்சயம் ஆட்சேபிக்க மாட்டார்கள்.
- முதலில், விபத்தில் காயம் அடைந்த நபர் சுயநினைவோடு இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.
- நினைவு இல்லாமல் மயக்கத்தில் இருப்பவருக்கு வாய் வழியாக தண்ணீரோ, உணவோ தரவே கூடாது.கொடுத்தால் அது அவருடைய மூச்சுப் பாதைக்குள் சென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடும்.
- அவரை சற்று நேராகப் படுக்க வைத்து மூச்சு சீராக இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும்.
- உங்களுக்கு நாடித்துடிப்பு பார்க்க தெரிந்தால் கை மணிக்கட்டில் தொட்டு நாடித்துடிப்பு இருக்கிறதா என்று பார்க்கலாம்.
- நாடித்துடிப்பு இருந்தால் மனிதர் உயிருடன் இருக்கிறார் என்று அர்த்தம்.இல்லையென்றாலும் உயிருடன் இருக்கிற வாய்ப்பு கிடையாது. கை, கால் போன்றவற்றில் வீக்கமோ அல்லது காயமோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால், அந்த பாகத்தை அசைக்காமல் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.
- வயிறு, நெஞ்சு போன்ற இடங்களில் கை வைத்து ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.
- வயிறு கனமாகவும், மார்புப்பகுதி குழைவாகவும் இருந்தால் மிகவும் ஆபத்து. பொதுவாக அனைவருக்கும், வயிறு குழைவாகவும், மார்புப்பகுதி விலா எலும்புகள் இருப்பதால் விரைப்பாகவும் இருக்கும்.
- சுய நினைவு இல்லாமல் இருந்தால், மூச்சு சீராக இல்லாமல் இருந்தால், வயிற்றில் பலத்த அடிபட்டு இருந்தால், தலையில் பலத்த காயங்கள் இருந்தால், வலிப்பு, வாந்தி வந்திருந்தால், இது போன்ற அறிகுறிகள் இல்லாத அடிப்பவர்களுக்கு தாராளமாக தண்ணீர் கொடுக்கலாம்.