சளி, இருமல், தலைவலியை விரட்டியடிக்கும் சுக்கு மல்லி காபி செய்வது எப்படி?
இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோ, உரசியோ நெற்றியில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும்.
அக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் கை வைத்தியமான சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் நின்றுவிடும்..
சுக்கு காபி பொடிக்கு தேவையான பொருட்கள் -
சுக்கு – 1/2 கப்
மல்லி – 1/4 கப்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சுக்கு காபி பொடி
தண்ணீர் – 2 கப்
சுக்கு காபி பொடி – 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சுக்கு, மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர், அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
கற்கண்டு கரைந்ததும் அதனை இறக்கி வடிகட்டினால் சுக்கு மல்லி காபி தயாராகிவிடும்.