தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்?

life-style-health
By Nandhini Jul 29, 2021 10:06 AM GMT
Report

அன்றைய காலங்களில் நம் முன்னோர்கள் (பித்தளை கலந்த) செம்பு பானைகளை தான் வீடுகளை தண்ணீர் நிரப்பி வைப்பர். ஆனால் அவை நவீன காலம் என்கின்ற போர்வையில் பழையவற்றை மறந்து பல நோய்களை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். அன்று தவம் செய்யும் முனிவர்கள் கூட செம்பு பாத்திரத்தைத்தான் பயன்படுத்தினார்கள்.

சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?

செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்? | Life Style Health

நீரிழிவு நோய்

மனிதனின் அடிப்படையான ஆரோக்கியத்திற்கு செம்பில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் தேவையானது. அதனால் தான் நாம் உணவு உண்ணும் போது தண்ணீர் மூலமாக எடுத்து கொள்கிறோம். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் செய்து நீரிழிவு நோயை கட்டுபடுத்துகிறது.

செரிமானம்

நாம் அசைவ உணவை உண்ட பிறகு செரிமானத்துக்கு நடப்பது, உடற்பயிற்சி போன்றவற்றை செய்து கொண்டு இருப்போம். ஆனால் செம்பு நீரை குடித்தால் மட்டும் போதும் செரிமானம் தானே செய்து கொள்ளும். இரவு முழுவதும் செம்பு பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து மறுநாள் காலையில் குடித்தால் நீரிழிவு நோயிக்கு ஒரு நல்ல மருந்து ஆகும்.

உடல் எடை குறைக்க

செம்பு உடலில் உள்ள கொழுப்பை கரைத்து ஆற்றலாக மாற்றுகிறது. எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் செம்பு பாத்திரத்தில் நீரை குடித்து வந்தால் கொழுப்பு வேகமாக குறையும்.

கர்ப்பிணிகள்

மூளையின் செயல்பாட்டிற்கு செம்பு பாத்திரத்தில் நீரை குடித்து வந்தால் போதும். கர்ப்பிணிகளை இதை செய்வதன் மூலம் மூளை குறைபாடு இல்லாமல் குழந்தை பிறக்கும்.

உடலை பாதுகாப்பாக

நுண்ணுயிர்களை கொல்லும் தன்மை கொண்டது. உடலில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் போன்ற நோய்க் கிருமிகளை அழித்து உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இதய நோய்கள்

உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் உண்டு. எனவே போதுமான அளவு செம்பு சத்தை எடுத்துக் கொள்வது அவசியம்.

புற்றுநோய்

புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

சருமம் பொலிவாக

வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.