தினமும் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?

life-style-health
By Nandhini Jul 29, 2021 07:46 AM GMT
Report
1817 Shares

"பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கிறான்" என்று குசும்பாக சொல்வது மாதிரி, இது அவரவர் உடல்நிலையை பொறுத்தது. அந்த உணர்வு வருவதற்கு காரணம், ஒரு சில ஹார்மோன்களை சார்ந்தே அமைகிறது. இளமை ஊஞ்சலாடும் வயதில் ஹார்மோன் சுரப்பு அதிகம் இருக்கும்.

ஆண்களுக்கு, டெஸ்ரோஜன் சுரப்பியும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பியும் பாலுணர்வை தூண்ட வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

திருமணம் ஆன புதிதில் ஒரு நாளைக்கு பலமுறையும், நாட்கள் செல்ல செல்ல ஒரு நாளுக்கு சில முறையும் பின்னர் வாரத்திற்கு ஒருமுறையும் இன்னும் சில வருடங்கள் கடந்தால் எப்போதாவது ஒரு முறையும் என இப்படி உடலுறவு கொள்வது குறைந்து கொண்டே, சில ஆண்டுகளில் அந்த உணர்வுகளுக்கே மதிப்பில்லாமல் போய்விடலாம்.

தாம்பத்திய வாழ்க்கையில் தினமும் உடல் உறவு வைத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது தான். அதே வேளையில் தினமும் உடல் உறவு வைத்துக்கொள்ள உடல் நலமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

உடல் உறவு நடைபெற வேண்டும் என்றால் அதற்காக குறிப்பட்ட நாளமில்லா சுரப்பிகள் தூண்டப்பட வேண்டும். இவை சரியாக வேலை செய்யாமல் போனால் தான், உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போவதெல்லாம். வயதாக வயதாக இந்த இளம் பருவ ஹார் மோன்களின் சுரப்பு குறையும் போது, நாளுக்கு நாள் உடலுறுவு வைத்துக்கொள்வதும் குறையும்.

தினமும் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? | Life Style Health

தினமும் உடலுறவுக் கொண்டால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் -

மன அழுத்தம்

மன அழுத்தம் குறைவதால் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. தொடர்ந்து ஸ்டிரஸ் ஹார்மோன் சுரப்பு குறைவதால் உயர் ரத்த அழுத்தம் முதல் பல்வேறு பாதிப்புகளுக்கான வாய்ப்பு குறைகிறது.

ஒற்றைத் தலைவலி குறையும்

நீங்கள் தினமும் ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுகிறீர்கள் எனில் அதற்கு மாத்திரைகள் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்வதைக் காட்டிலும் இயற்கை வழியில் குறைக்கலாம். இதில் ஒற்றைத் தலைவலி பிரச்னையும் குறையும் என தெரிவிக்கிறது.

மூட்டு வலிகள்

உங்களுக்கு கடுமையான வேலையால் ஏற்படும் உடல் வலி, கீழ்வாதம், மூட்டு வலி போன்றவை எண்டோர்ஃபின் (Endorphins) சுரப்பால் முற்றிலும் குறையும் என தெரிவித்துள்ளது.

முகம் பிரகாசிக்கும்

பாலர் சென்றாலும் கிடைக்காத புத்துணர்ச்சி உடலுறவில் கிடைக்கும். அதுவும் காலை நேரத்தில் உடலுறவு கொள்வதால் வேலைக்குச் செல்லும் போது பிரகாசமான முகப் பொலிவுடன் உற்சாகமாக இருக்கும். பதட்டம் நீங்கும் உங்களைத் தாழ்வாக உணரவைக்கும் ஆன்ஸைட்டி எனப்படும், பதட்டம், தனிமை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இல்லாமல் ஃபீல் ஃப்ரெஷாக உணர்வீர்கள்.

ஆழ்ந்த தூக்கம்

தினமும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதால், மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் அளவு அதிகரிக்கிறது. மகிழ்ச்சி காரணமாக ஆக்சிடோசின், எண்டார்பின் போன்றவை அதிகரிக்கிறது. இதனால் மனம் நிறைவு அடைகிறது. தூக்கம் வருகிறது. நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதன் மூலம் வாழும் காலம் அதிகரிக்கிறது, நாள் முழுவதும் புத்துணர்வு, ஆற்றல் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

தினமும் உறவில் ஈடுபடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியுமாம். மேலும், நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க முடியுமாம். பெண்கள் தினமும் உறவு கொள்ளும் போது, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் முதலிய நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.