அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிட்டால் இந்த பக்கவிளைவுகளெல்லாம் ஏற்படுமாம்! உஷார்

life-style-health
By Nandhini Jul 28, 2021 08:03 AM GMT
Report

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

அன்னாச்சி பழத்தில் உடலுக்கு நன்மை கொடுக்கும் பல சத்துக்கள் இருந்தாலும் அது நமது உடலுக்கு தீமையை ஏற்படுத்தும். அளவாக சாப்பிடுவதால் நன்மை கொடுக்கும் அன்னாசிப்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இதன் இனிப்பு தன்மை மற்றும் சுவை காரணமாக அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. இதனை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது.

அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிட்டால் இந்த பக்கவிளைவுகளெல்லாம் ஏற்படுமாம்! உஷார் | Life Style Health

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு

அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. எனவே, இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். 

பற்களுக்கு

அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். 

கர்ப்பிணி பெண்களுக்கு

அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது. கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வயிற்று வலி

அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது. அதனால் இதை உட்கொண்ட பிறகு வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும். இதனால் சில பேருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படும். மருந்துகளோடு சேர்ந்து கொள்ளும் அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலிப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம்.

அலர்ஜி

அன்னாசி பழம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். இதனை போக்க அன்னாசி பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும். சொறியை ஏற்படுத்தும் பழ என்சைம்களை இது நீக்கிவிடும்.

கருச்சிதைவு

ஏற்படும் கருவை சுமக்கும் பெண்கள் இந்த பழத்தை உண்ணாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இருப்பினும் பிரசவத்தின் ஆரம்ப கட்டங்களில் இல்லாமல் பிற கட்டங்களில் பெண்கள் இந்த பழத்தை உண்ணலாம்.

ஊறும் உணர்வு

அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது. அதனால் இதை உட்கொண்ட பிறகு வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும். இதனால் சில பேருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படும்.