வாய்ப்புண், வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் மணத்தக்காளி வற்றல் குழம்பு? செய்வது எப்படி?
இன்றளவும் ஏராளமான மக்களுக்கு தெரிந்த ஒன்று மணத்தக்காளி சாப்பிடுவதால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் என உள்ளுக்குள் இருக்கும் அனைத்து வகையான புண்களையும் சரி செய்யும் என்பதுதான். உண்மையை சொல்லப்போனால், அவர்கள் சொல்வது 100 சதவீகிதம் சரியானது தான். இந்த மணத்தக்காளியை சாப்பிடுவதால், நமது உடலிலுள்ள புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இந்த மணத்தக்காளி இலையில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு, வயிற்றில் உள்ள கட்டிகளை கரைக்கும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள் :
காயவைத்த மணத்தக்காளி வற்றல் - 25 கிராம்,
காய்ந்த மிளகாய் - 2,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - சிறிதளவு.
செய்முறை :
புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் சாம்பார் பொடி சேர்த்துக் கிளற வேண்டும்.
அடுத்து இதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்.